உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 பட பரபரக்கும் ஷூட்டிங் அப்டேட்... பிரபல ஹாலிவுட் நடிகர் கொடுத்த ருசிகர தகவல் இதோ!

கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு குறித்த புது தகவல்,benedict garrett completes his shoot in indian 2 | Galatta

இந்திய திரை உலகமே வியந்து பார்க்கக்கூடிய மிகப்பெரிய ஆளுமையாக திகழும் உலகநாயகன் கமல்ஹாசன் கடைசியாக தனது தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. விக்ரம் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து  உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்த அடுத்த அட்டகாசமான திரைப்படங்கள் தயாராக இருக்கின்றன. அந்த வகையில் நாயகன் திரைப்படத்திற்கு பிறகு மிக நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தனது 234 ஆவது திரைப்படமான KH234 படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் வெளிவந்த மாலிக் படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் கமல் ஹாசன் திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடிக்க இருக்கிறார். 

மேலும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகவும் அது குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன அதேபோல் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்திலும் ஒரு படத்தில் கமல்ஹாசன் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. இதனிடையே பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடைபெற்ற விபத்தின் காரணமாக தடைபட்டது. பின்னர் தடைகளை அத்தனையும் நீங்கிய பிறகு இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் தொடங்கியது. 

கமல்ஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுள் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா, ஹாலிவுட் நடிகர் பெனிடிக்ட் கேரெட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் உடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தியன் 2 படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பு வெகு விரைவில் நிறைவடைந்து இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக இந்தியன் 2 திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பிரபல ஹாலிவுட் நடிகர் பெனிடிக்ட் கேரெட்  தற்போது தன் பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று இந்தியன் 2 படப்பிடிப்பில் எனது கடைசி நாள். இது கொஞ்சம் கடின உழைப்பு தான் ஆனாலும் சிறந்த இயக்குனர் புகழ்மிக்க நடிகர்கள் மற்றும் அசத்தலான சர்வதேச படக் குழு உடன் பணியாற்றியது அற்புதமான அனுபவமாக இருக்கிறது. படம் எப்படி இருக்கும் என பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். ஹாலிவுட் நடிகர் பெனிடிக்ட் கேரெட்டின் அந்தப் பதிவு இதோ…
 

Today is my final day of shooting for Indian 2. It’s been hard work but a fantastic experience working alongside an acclaimed director, iconic actors & an amazing international crew & cast.
Look forward to seeing the end product later this year. #Kollywood #Tamil #actorslife pic.twitter.com/U3WF1I1YOJ

— Bendi G बेंडी (@BenedictGarrett) March 15, 2023

உதயநிதி ஸ்டாலினின் அடுத்த அதிரடியான கண்ணை நம்பாதே... ரொமான்டிக்கான காத்திரு பாடலின் லிரிக் வீடியோ இதோ!
சினிமா

உதயநிதி ஸ்டாலினின் அடுத்த அதிரடியான கண்ணை நம்பாதே... ரொமான்டிக்கான காத்திரு பாடலின் லிரிக் வீடியோ இதோ!

'சிலம்பரசன்TR ரசிகர்களே தயாரா?'- ஆவலோடு காத்திருந்த பத்து தல பட பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா அறிவிப்பு இதோ!
சினிமா

'சிலம்பரசன்TR ரசிகர்களே தயாரா?'- ஆவலோடு காத்திருந்த பத்து தல பட பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா அறிவிப்பு இதோ!

வர்த்தகத்தில் தளபதி விஜயின் லியோ படத்தை சூர்யா42 தாண்டியதா? சரியான விளக்கம் கொடுத்த முன்னணி தயாரிப்பாளர்! வீடியோ உள்ளே
சினிமா

வர்த்தகத்தில் தளபதி விஜயின் லியோ படத்தை சூர்யா42 தாண்டியதா? சரியான விளக்கம் கொடுத்த முன்னணி தயாரிப்பாளர்! வீடியோ உள்ளே