டாடா தயாரிப்பாளருடன் இணைந்த அருள்நிதியின் அடுத்த அதிரடி படம்... சர்ப்ரைஸாக வந்த மிரட்டலான டைட்டில்-மோஷன் போஸ்டர் இதோ!

அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு,arulnithi in next movie titled kazhuvethi moorkan first look out now | Galatta

தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக தொடர்ந்து தரமான படைப்புகளில் நடித்து வரும் நடிகர் அருள்நிதி இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த வம்சம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமனார். இதனை அடுத்து இயக்குனர் சாந்த குமார் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற மௌன குரு திரைப்படத்திற்கு பிறகு பிரபல நடிகராக வளர்ந்த அருள்நிதி, கோப்ரா படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்குனராக களமிறங்கிய முதல் படமான டிமான்டி காலனி திரைப்படத்திற்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக உயர்ந்தார். தொடர்ந்து ஆறாது சினம், பிருந்தாவனம், இரவுக்கு ஆயிரம் கண்கள், K-13 என தொடர்ந்து வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுத்து வெரைட்டியான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக அருள்நிதி நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு த்ரில்லர் திரைப்படங்களும் தனி கவனம் பெறும். ஹாரர் த்ரில்லர், சஸ்பென்ஸ் த்ரில்லர், ஆக்சன் த்ரில்லர், கிரைம் த்ரில்லர், சைக்கலாஜிக்கல் த்ரில்லர் என த்ரில்லர் படங்களில் தொடர்ந்து ட்ரீட் கொடுக்கும் அருள்நிதி நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டில் எரும சாணி Youtube சேனல் மூலம் பிரபலமடைந்த விஜயகுமார் இயக்குனராக களமிறங்கிய D-BLOCK, இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் தேஜாவு, இயக்குனர் இன்னசி பாண்டியன் இயக்கத்தில் டைரி ஆகிய திரைப்படங்கள் வரிசையாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த வரிசையில் அடுத்ததாக மீண்டும் அஜய் ஞானமுத்து உடன் இணைந்துள்ள நடிகர் அருள்நிதி டிமான்டி காலனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டிமான்டி காலனி 2 திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இதனிடையே அருள்நிதி அடுத்து நடித்து வரும் புதிய திரைப்படத்தின் அதிரடியான டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் & மோஷன் போஸ்டர் தற்போது வெளிவந்தது. சமீபத்தில் பிக் பாஸ் கவின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான டாடா திரைப்படத்தின் தயாரிப்பாளர் S.அம்பேத்குமார் தனது ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிக்கும் கழுவேத்தி மூர்க்கன் படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கிறார். ஜோதிகாவின் ராட்சசி படத்தை இயக்கிய இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் அருள்நிதியுடன் இணைந்து சார்பட்டா பரம்பரை & நட்சத்திரம் நகர்கிறது படங்களின் நாயகி துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க, சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த், ராஜசிம்மன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்திற்கு D.இமான் இசையமைக்கிறார். ஸ்ரீதர் ஒளிப்பதிவில், நாகூரான் படத்தொகுப்பு செய்துள்ள கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்திற்கான பாடல்களை கவிஞர் யுகபாரதி எழுதியுள்ளார். 

கடந்த 2022ம் ஆண்டில் மிரட்டலான புதிய லுக்கில் இருக்கும் புகைப்படங்களோடு இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், இன்று மார்ச் 15ஆம் தேதி சர்ப்ரைஸாக கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அதிரடியான மோஷன் போஸ்டர் வெளியானது. ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ள கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இதோ…
 

நடிகை ராதிகாவின் பேத்தி... இந்த கிரிக்கெட் வீரரின் மகளா!- சோசியல் மீடியாவில் வைரலாகும் க்யூட்டான புகைப்படங்கள் இதோ!
சினிமா

நடிகை ராதிகாவின் பேத்தி... இந்த கிரிக்கெட் வீரரின் மகளா!- சோசியல் மீடியாவில் வைரலாகும் க்யூட்டான புகைப்படங்கள் இதோ!

உதயநிதி ஸ்டாலினின் அடுத்த அதிரடியான கண்ணை நம்பாதே... ரொமான்டிக்கான காத்திரு பாடலின் லிரிக் வீடியோ இதோ!
சினிமா

உதயநிதி ஸ்டாலினின் அடுத்த அதிரடியான கண்ணை நம்பாதே... ரொமான்டிக்கான காத்திரு பாடலின் லிரிக் வீடியோ இதோ!

'சிலம்பரசன்TR ரசிகர்களே தயாரா?'- ஆவலோடு காத்திருந்த பத்து தல பட பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா அறிவிப்பு இதோ!
சினிமா

'சிலம்பரசன்TR ரசிகர்களே தயாரா?'- ஆவலோடு காத்திருந்த பத்து தல பட பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா அறிவிப்பு இதோ!