தலைவர் 171: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பக்கா அதிரடி ஆக்சன் பட ஷூட்டிங் குறித்த மாஸ் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்! வைரல் வீடியோ இதோ

ரஜினிகாந்தின் தலைவர் 171 அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்,lokesh kanagaraj shared shooting update of thalaivar171 movie with rajinikanth | Galatta

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 171 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அதிரடியான அப்டேட்டை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சர்ப்ரைஸாக பகிர்ந்து கொண்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் இமாலய வெற்றி பெற்றதை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த லியோ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. எனவே இவர்கள் இருவரும் இணையும் தலைவர் 171 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த தலைவர் 171 திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவலை லோகேஷ் கனகராஜ் பகிர்ந்து கொண்டார். 

சென்னையில் நடைபெற்ற நடிகர் காளிதாஸ் ஜெயராமின் அவள் பெயர் ரஜினி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் அவள் பெயர் ரஜினி படத்தின் டிரைலரை வெளியிட்ட பிறகு மேடையில் பேசிய போது காளிதாஸ் ஜெயராம் உட்பட படக் குழுவினரை பாராட்டினார். தொடர்ந்து பேசும்போது அவரிடம், “படத்தின் பெயர் அவள் பெயர் ரஜினி என இருக்கிறது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் நீங்கள் இணையும் தலைவர் 171 படம் குறித்து ஏதாவது அப்டேட் கொடுத்து விட்டு போங்கள்” என கேட்டபோது, “அடுத்த வாரம் முதல் ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பிக்க போகிறேன் இப்போதுதான் லியோவில் இருந்து வெளியில் வந்திருக்கிறோம்” என தெரிவித்தார். தொடர்ந்து, “ தலைவர் 171 படப்பிடிப்பு” குறித்து கேட்டபோது, “படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்கும்” என தெரிவித்திருக்கிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இந்த பதிலால் தற்போது ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்து இருக்கின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசிய அந்த வீடியோ இதோ...

 

முதல்முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணி இணையும் இந்த தலைவர் 171 படத்திற்கு அன்பறிவு மாஸ்டர்கள் ஸ்டன்ட் இயக்குனர்களாக பணியாற்ற ராக் ஸ்டார் அனிருத் இசை அமைக்கிறார். இதனிடையே தனது திரைப்பயணத்தில் 170 ஆவது திரைப்படமாக உருவாகி வரும் தலைவர் 170 திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வருகிறார். ஜெய் பீம் படத்தின் இயக்குனர் TJ. ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் இந்த தலைவர் 170 திரைப்படத்தில், மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் பூஜை உடன் தொடங்கப்பட்ட தலைவர் 170 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் உடன் இணைந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மிக முக்கிய கவுரவ வேடத்தில் நடித்திருக்கும் கிரிக்கெட்டை மையப்படுத்திய பொலிட்டிக்கல் ஸ்போர்ட்ஸ் திரில்லர் படமான லால் சலாம் திரைப்படம் வருகிற 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.