ஜிகர்தண்டா டபுள் X: ராகவா லாரன்ஸ் & SJ சூர்யா கதாபாத்திரங்களின் பெயர்களுக்கான காரணத்தை பகிர்ந்த கார்த்திக் சுப்பராஜ்! ஸ்பெஷல் வீடியோ

ஜிகர்தண்டா XX கேரக்டர்களின் பெயர் காரணத்தை பகிர்ந்த கார்த்திக் சுப்பராஜ்,Karthik subbaraj about reasons of character names jigarthanda xx | Galatta

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் SJ சூர்யா இணைந்து நடித்து வெளிவந்திருக்கும் ஜிகர்தண்டா டபுள் X ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டாகி உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வெளிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பேட்ட படத்தின் கொண்டாட்டத்திற்கு பிறகு கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகளுக்கு பின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் அடுத்த கொண்டாட்டமாக நேரடியாக தியேட்டருக்கு வந்திருக்கும் படம் தான் ஜிகர்தண்டா டபுள் X.

இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களோடு லைட்ஸ் கேமரா அனாலிசிஸ் சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், ஜிகர்தண்டா டபுள் X படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார் அந்த வகையில், "இந்தப் பெயர்கள் எப்படி வந்தது அல்லிய சீசர் என்ற பெயர்?" என கேட்டபோது, “அது ஒரு ஃபிளோவில் எழுதும் போது வந்தது அவ்வளவுதான். ஆனால் சீசர் என்கிற வார்த்தையும் அல்லியன் என்கிற வார்த்தையும் ஏற்கனவே வைத்திருந்தது தான். அல்லிய சீசர் என்ற சத்தம் தான் முதலில் வந்தது ஒரு ஜூலியட் சீசர் மாதிரி இந்த அல்லிய சீசர் என்று வைக்க வேண்டும். அல்லியன் என்று ஒரு பெயர் இருக்கிறது அல்லியன் என்றால் ஒற்றை யானை என்று ஒரு அர்த்தம் இருக்கிறது. காட்டில் இருந்து பிரிந்து வந்த ஒற்றை யானைக்கு தான் அல்லியன் என்று பெயர். அல்லியன் என்பது ஒரு யானை உடைய பெயர். எப்படி கும்கி யானை என்று சொல்கிறோமோ அது மாதிரி ஒரு குறிப்பிட்ட யானையின் பெயர் அல்லியன் என சொல்வார்கள் இது காட்டில் இருந்து பிரிந்து வந்த யானை. இவரும் (ராகவா லாரன்ஸின் கதாபாத்திரம்) காட்டில் இருந்து பிரிந்து வந்தவர் தான். அதை வெறும் அல்லியன் என்று வைக்காமல் கிளின்ட் ஈஸ்ட்வுட் வந்து இவருக்கு பெயர் வைக்கிறார். அதற்கு இந்த சத்தம் சரியாக இருக்கும் என்று பெயர் வைத்தோம். மேலும் அவருக்கு (SJ சூர்யாவின் கதாபாத்திரம்) அந்தப் பெயர் திடீரென வந்தது கிருபை ஆரோக்கியராஜ் என்கிற பெயர்.” என தெரிவித்துள்ளார். இன்னும் பல முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

ராகவா லாரன்ஸ் மற்றும் SJ.சூர்யா உடன் இணைந்து நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்திருக்கும் டபுள் X படத்தில் ஷைன் டேம் சாக்கோ, சத்யன், அரவிந்த் ஆகாஷ், இளவரசு மற்றும் பவா செல்லதுரை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ஜிகர்தண்டா டபுள் X படத்திற்கு இந்திய சினிமாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான திரு என்கிற திருநாவுக்கரசு அவர்களின் ஒளிப்பதிவில், ஷபிக் முஹம்மத் அலி படத்தொகுப்பு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க விவேக் பாடல்களை எழுதி இருக்கிறார். திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.