"பிரேமம்" இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனுக்கு ஆறுதல் கூறிய உலகநாயகன் கமல்ஹாசன்... இயக்குனர் பார்த்திபனுக்கு குவியும் பாராட்டுகள்! விவரம் உள்ளே

பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனுக்கு ஆறுதல் கூறிய கமல்ஹாசன்,kamal haasan consoled premam director alphonse puthren | Galatta

பிரேமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்த மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சமீபத்தில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்றை பகிர்ந்து கொண்டார். திடீரென திரையரங்குகளுக்கான திரைப்படங்களை இயக்குவதை நிறுத்துவதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் வெளியிட்ட அறிவிப்பு ஒன்று ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் வெளியிட்ட அந்த அறிக்கையை அடுத்த சில நிமிடங்களில் நீக்கி இருக்கிறார். நீக்கப்பட்ட அந்த அறிக்கையில், “திரையரங்குகளுக்கான படங்களை இயக்குவதை நிறுத்தப் போகிறேன். எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர் எனும் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டிருப்பதால் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். ஆனால் ஆல்பம் குறும்படங்கள் மற்றும் OTT தளங்களுக்கான படங்களை தொடர்ந்து எடுப்பேன். ஆனால் நிச்சயமாக சினிமாவை விட்டு நான் போக மாட்டேன் ஏனென்றால் அதை விட்டால் எனக்கு வேறு வழி இல்லை” என குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தார்.
 
இதனிடையே கடந்த நவம்பர் 7ஆம் தேதி உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ஒரு பாடல் பாடி அதனை இயக்குனர் பார்த்திபன் அவர்களுக்கு அனுப்பி வைத்து எப்படியாவது கமல்ஹாசன் அவர்களிடம் இதை சேர்க்கும்படி கேட்டிருக்கிறார். இதை அடுத்து தன்னுடைய முயற்சியால் அந்த பாடலை உலக நாயகன் இடம் சேர்த்த இயக்குனர் பார்த்திபன் அவர்கள் அதற்கு உலகநாயகன் அவர்களின் பதிலையும் பெற்று தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அவர்களுக்கு உடல் நிலையை பார்த்துக் கொள்ளும்படி கமல்ஹாசன் ஆறுதலாக பேசியிருக்கிறார். அந்தப் பதிவில்,

வணக்கம் அல்போன்ஸ் புத்திரன் பாடல் கேட்டேன் அவருக்கு உடல் சுகம் இல்லை என்று சொன்னீர்கள் ஆனால் மனசு நன்றாக இருப்பதாக தெரிகிறது. அவரது குரல் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அப்படியே சந்தோஷமாக இருக்க என்னுடைய வாழ்த்துக்கள்… அவர் எடுக்கக்கூடிய முடிவு அவருடையதாக இருந்தாலும் உடம்பை நன்றாக பார்த்துக் கொள்ள சொல்லுங்கள்.. வாழ்த்துக்கள். TAKE CARE அல்போன்ஸ் TAKE CARE… என பேசி இருக்கிறார்.

மேலும் அந்த பதிவில், “பெரிதோ சிறிதோ விருதே கிடைத்தாலும்,என் பிறந்த நாள் பரிசாக நான் நினைப்பது இக்குரலை தான்…. கேட்கும் மாத்திரத்தில் புரியாது…. புதிய பாதைக்கு முன் நாகரீகமாக யாசகமே பலரிடம் கேட்டிருக்கிறேன்.அதன் பின் அருள் பாவிக்கும் ரசிகர்களாகிய உங்களின் ஆதரவால் நான் யாரிடமும் எனக்காக எதையும் கேட்பதில்லை.ஆனால் மற்றவர்களுக்காக நிறைய கேட்டிருக்கிறேன். அப்படி மலையாள ‘ப்ரேமம்’ செய்த இயக்குனர் Mr.அல்போன்ஸ் புத்திரன் கமல் சார் பிறந்த நாளுக்கு பரிசாக பாடல் தொகுப்பு ஒன்றை தன் குரலில் பதிவு செய்து எனக்கனுப்பி “எல்லா வழியிலும் முயற்சித்து விட்டேன்,நீங்கள் அவரிடம் சேர்ப்பிக்க இயலுமா?” அவருக்குதவ கமல் சாரை அணுகினேன். அதற்களித்த பதிலது.வரிசை கட்டிக்கொண்டு படங்கள்,சொந்தப. பட வேளைகள்,big boss, அரசியல் பணிகள், இப்படி…. இப்படி அப்படி நகர முடியா நெருக்கடியான சூழ்நிலையிலும் தன் குரல் மூலம் ஒரு கலைஞருக்கு தெம்பு டானிக் அதுவும் துரிதமாக அனுப்பியவருக்கு வார்த்தைகள் அற்ற மவுனத்தை ( நேற்றானதால்) மனப்பூர்வமாக பகிர்ந்தேன். அதை கேட்டு பெட்டி பெட்டியாக இயக்குனர் எனக்கு நன்றி அனுப்பினார். உடல் நலம் காரணமாக மனநலமும் குன்றியுள்ள ஒருவருக்கு ஒரு சொட்டு மருந்தாக நான் பயன்பட்டதால் வாழ்வின் ஒரு துளி அர்த்தப்பட்டது.இதைச் சொல்லக் காரணம் out of the way போய் கூட,அடுத்தவரின் புன்னகைக்கு காரணமாகலாம்.” என்றும் குறிப்பிட்டு இயக்குனர் பார்த்திபன் அவர்கள் பதிவிட்டு இருக்கிறார். இயக்குனர் பார்த்திபன் அவர்களின் அந்த பதிவு இதோ...


 

பெரிதோ சிறிதோ விருதே கிடைத்தாலும்,என் பிறந்த நாள் பரிசாக நான் நினைப்பது இக்குரலை தான்….

கேட்கும் மாத்திரத்தில் புரியாது….
புதிய பாதைக்கு முன் நாகரீகமாக யாசகமே பலரிடம் கேட்டிருக்கிறேன்.அதன் பின் அருள் பாவிக்கும் ரசிகர்களாகிய உங்களின் ஆதரவால் நான் யாரிடமும் எனக்காக எதையும்… pic.twitter.com/INYEj3f8UY

— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 16, 2023