"அந்த ஜானர் ரொம்ப பிடிக்கும்... அது மாதிரி நிறைய கதைகள் இருக்கு!"- கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க விரும்பும் படங்கள் பற்றிய ஸ்பெஷல் வீடியோ இதோ!

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க விரும்பும் படங்கள் பற்றிய ஸ்பெஷல் வீடியோ,gautham vasudev menon wants to make films like his nadunisi naaikal  | Galatta

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பேட்ட படத்திற்கு பிறகு தனுஷின் ஜெகமே தந்திரம், சீயான் விக்ரமின் மகான் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து Netflix மற்றும் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியான நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா டபுள் X திரைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனல் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களோடு சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் பல முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பேசும் போது, “நீங்கள் இன்னமும் நடுநிசி நாய்கள் படத்தை குறிப்பிட்டு சொல்கிறீர்களா?” என கேட்க, “ஆமாம்” என்றார். “அப்படியா அந்த படம் வெளியாகி பத்து வருடங்கள் ஆகிவிட்டது அதனுடைய தாக்கம் உங்களை இன்னும் விடவில்லையா?” என்று கேட்க, “இல்லை இல்லை” என்றார். 

தொடர்ந்து அவரிடம், “ஆனால் அதனுடைய தாக்கம் உங்களை உங்களின் அடுத்த படத்தின் வேலைகளை பாதிக்குமா? உங்களின் ஆற்றலின் மீது உங்களை சந்தேகம் கொள்ள வைத்துள்ளதா? உதாரணத்திற்கு அந்தப் படம் சரியாக ஓடவில்லை அதற்கு இதுதான் காரணமா இதை நான் மாற்ற வேண்டுமா? இது சரிதானா என்றெல்லாம்…” என கேட்ட போது, “அதாவது நடுநீசி நாய்கள் படத்தை பொருத்தவரையிலும் எனக்கு நான் என்ன செய்தேன் என்று தெரியும் ஏனென்றால் விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு அடுத்தபடியாக உடனடியாக வெளிவந்த படம் தான் நடுநிசி நாய்கள். முற்றிலும் ஒரு வித்தியாசமான நிறத்தைக் கொண்டிருந்தது. ஆனால் அந்தப் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு அந்தப் படத்தில் நான் மேற்கொண்ட பாதையை நான் சந்தேகித்தேன். ஆனால் அந்த மாதிரியான படங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு ஜானர் என்னிடம் அந்த மாதிரியான கதைகள் நிறைய உள்ளது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் நடுநிசி நாய்கள் திரைப்படம் எனக்கு காண்பித்த ஒரு சில விஷயங்களை தான் அது போல உள்ள மற்ற கதைகளை படமாக்காமல் இருந்த காரணம் அந்தப் படத்திற்கு நல்ல ஒரு வரவேற்பு கிடைத்து. உடனடியாக ஏமாற்றமும் வந்துவிட்டது அதனால் அந்தப் பாதையை நான் திரும்பவும் மேற்கொள்ள முயற்சிக்கவில்லை. நடுநீசி நாய்கள் படத்தின் கிடைத்த அனுபவத்தினால் வெந்து தணிந்தது காடு படத்தை நான் அந்த வரிசையில் எடுக்க போவதில்லை. ஏனென்றால் எனக்கு குறிப்பாக அந்த படத்தில் வருவது போல் கதாபாத்திரங்களை உருவாக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்தப் படம் நல்ல வரவேற்பு பெற்றது ஆனால் நான் எதிர்பார்த்தது போல் பெறவில்லை. வெந்து தணிந்து படத்தின் தயாரிப்பாளர் என்னிடம் கணக்கு வழக்குகளை காட்டினார் லாபம் எல்லாருக்கும் கிடைத்துள்ளது. ஆனால் நான் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை.” என பதில் அளித்து இருக்கிறார். மேலும் திரு பரத்வாஜ் ரங்கன் அவர்களோடு இணைந்து தனது தொழில் பயணத்தின் பல முக்கிய விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.