"பன்ச் வசனங்கள், இன்ட்ரோ பாடல் & ஃபைட் எதுவும் இல்லை!"- தளபதி விஜயின் லியோ பட செம்ம அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்! வைரல் வீடியோ

தளபதி விஜயின் லியோ பட செம்ம அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்,lokesh kanagaraj said no punch dialogues for vijay in leo movie | Galatta

மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் கூட்டணியில் பக்கா அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமாக உருவாகி இருக்கின்ற திரைப்படம் தான் லியோ. கில்லி திருப்பாச்சி ஆதி மற்றும் குருவி ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு 5வது முறையாக தளபதி விஜய் உடன் இணைந்து நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்திருக்கும் இந்த லியோ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். 

இதுவரை தளபதி விஜய்யின் திரை பயணத்திலேயே இல்லாத அளவிற்கு மிரட்டலான அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமாக வெளிவர இருக்கும் இந்த லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக உலகெங்கும் திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. ரிலீசுக்கு இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில் லியோ திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நமக்கு கலாட்டா பிளஸ் சேனலில் பிரத்தியேக பேட்டி கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் நமது திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களோடு கலந்துரையாடிய போது லியோ திரைப்படம் குறித்தும் தனது திரைப்பயணம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், லியோ திரைப்படத்தில் தளபதி விஜயின் கதாபாத்திரத்தை பொருத்தவரையில் என்ன மாதிரியான வித்தியாசங்கள் செய்திருக்கிறீர்கள்? என கேட்டபோது, “பன்ச் டயலாக் இல்லை… இன்ட்ரோ பாடல் இல்லை… இன்ட்ரோ சண்டைக்காட்சி இல்லை… ஒரு சராசரியான 40 களில் இருக்கக்கூடிய ஒரு நபர் எப்படி நடந்து கொள்வாரோ அதுதான் படத்தில் இருக்கும். அவருடைய ஸ்டைலில் பேசக்கூட இல்லை. வழக்கமாக விஜய் அண்ணா அவர்களுக்கு ஒரு மேனரிசம் இருக்கிறது அல்லவா..? அது இல்லை. அவர் பேசும் விதம் பன்ச் டயலாக்குகளை சொல்லுவது என எதுவுமே இந்த படத்தில் இல்லை. இது ஒரு கதை இதற்கு இப்படித்தான் இருக்க வேண்டும் ஏனென்றால் மொத்த கதையும் அவருடைய தோளில் தான் இருக்கிறது என்பது அவருக்கு தெரியும். இதற்காக அவர் நிறைய ஹோம் வொர்க் செய்து இருக்கிறார் என நினைக்கிறேன். ஏனென்றால் நான் கதை சொல்லி மூன்று மாதங்கள் கழித்து செட்டில் அவரை பார்க்கும் போது முதல் நாள் ஒரு முக்கியமான காட்சியை படமாக்குகிறோம் அப்போது அவரை பார்க்கும் போது நான் என்ன நினைத்து வந்தேனோ அந்த விஜய் அண்ணாவை தான் பார்த்தேன். அப்போது இருந்து நடிகர் விஜய் சாரை பார்க்கவில்லை. அப்போதே இவர் தயாராகி வந்து விட்டார் என முடிவு செய்துவிட்டேன்.” என தெரிவித்திருக்கிறார். இன்னும் பல சுவாரஸ்ய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.