“என்ன மணிகண்டன் ஆரம்பிக்கலாமா..?” ரசிகர்களால் வைரலாகும் லோகேஷ் கனகராஜ் பதிவு.. – பின்னணி இதோ..

மணிகண்டன் நடிப்பில் வெளியாகும் குட்நைட் பட டிரைலரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ் - Lokesh kanagaraj launched manikandan good night movie | Galatta

இந்திய சினிமாவில் தற்போது அனைத்து மொழி ரசிகர்களாலும் அதிகம் பேசப்படும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். முன்னதாக அவர் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தின் மெகா ஹிட் தொடர்ந்து தற்போது தளபதி விஜயுடன் இணைந்து லியோ படத்தை இயக்கி வருகிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் லியோ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இணையத்திலும் சரி, களத்திலும் லோகேஷ் கனகராஜ் மிகபெரிய பேசு பொருளாக கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவரின் எந்தவொரு செயல்பாடும் மிகப்பெரிய செய்தியாக மாறுகிறது.

இந்நிலையில் ஜெய் பீம் பட புகழ் மணிகண்டன் நடிப்பில் உருவாகி வரும் குட் நைட் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.  டிரைலருடன் லோகொஷ் கனகராஜ் “சேர்ந்தே கொண்டாடுவோம் என்ன.. மணிகண்டன் ஆரம்பிக்கலாமா?” என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

 

Good luck to the entire team of #GoodNight 😊

Glad to release the trailer
- https://t.co/qcrgdT3l3k

Let’s Celebrate United,
Enna @Manikabali87 😉
ஆரம்பிக்கலாமா 🤜🤛#GoodNightFromMay12

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) May 2, 2023

சமீபத்தில் தனியார் விழாவில் உலகநாயகன் கமல் ஹாசனுடைய தீவிர ரசிகர் நான்தான் என்று லோகேஷ் கனகராஜும் மணிகண்டனும் பேசிய வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவு வைரலானது. இதனிடையே மணிகண்டன் அணி.. லோகேஷ் அணி என்று இணையத்தில் கமல் ஹாசன் ரசிகர் சண்டையே உருவாகி டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மணிகண்டன் அவர்களின் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள குட் நைட் படத்தின் டிரைலரை லோகேஷ் வெளியிட்டுள்ளது. ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பீல் குட் கதைக்களத்தில் மணிகண்டன் குறட்டையோடும் செய்யும் சேட்டை காட்சிகளுடன் வெளியாகியுள்ள குட் நைட் படத்தின் டிரைலர் ரசிகர்களை தற்போது கவர்ந்து வருகிறது.

இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் வித்யாசமான கதைக்களத்தில் ஹீரோவாக மணிகண்டன் நடித்துள்ள இப்படத்தில் நடிகர்கள் மீதா ரகுநாத், ரமேஷ் திலக், பக்ஸ், பாலாஜி சக்தி வேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்ய பரத் விக்ரமன் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் படத்திற்கு இசையமைக்கிறார் சியான் ரோல்டன். இப்படம் வரும் மே மாதம் 12 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

குட் நைட் திரைப்படத்தின் முதல் பார்வை தொடங்கி முன்னோட்டம் வரை ரசிகர்களிடையே தனி எதிர்பார்பை உருவாக்கி வந்துள்ளது. மேலும் இப்படத்தில் இடம் பெற்ற ‘நான் காலி’ பாடல் இணையத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடேங்கப்பா.. இரண்டே நாளில் இத்தனை கோடியா?.. பொன்னியின் செல்வன் 2 Collection report .. -  உற்சாகத்தில் ரசிகர்கள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..
சினிமா

அடேங்கப்பா.. இரண்டே நாளில் இத்தனை கோடியா?.. பொன்னியின் செல்வன் 2 Collection report .. - உற்சாகத்தில் ரசிகர்கள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..

உழைப்பாளர் தினத்தில் மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் பட Special Treat... மாஸான அறிவிப்போடு வந்த புது GLIMPSE இதோ!
சினிமா

உழைப்பாளர் தினத்தில் மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் பட Special Treat... மாஸான அறிவிப்போடு வந்த புது GLIMPSE இதோ!

'அந்த ஒரு விஷயத்துகாக தான் தசாவதாரம் படம் பண்ண ஒத்துக்கிட்டேன்!'- உண்மையை உடைத்த தோட்டா தரணியின் ஸ்பெஷல் பேட்டி இதோ!
சினிமா

'அந்த ஒரு விஷயத்துகாக தான் தசாவதாரம் படம் பண்ண ஒத்துக்கிட்டேன்!'- உண்மையை உடைத்த தோட்டா தரணியின் ஸ்பெஷல் பேட்டி இதோ!