அடேங்கப்பா.. இரண்டே நாளில் இத்தனை கோடியா?.. பொன்னியின் செல்வன் 2 Collection report .. - உற்சாகத்தில் ரசிகர்கள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..

100 கோடி வசூல் சாதனை படைத்த பொன்னியின் செல்வன் 2 விவரம் இது – Ponniyin selvan 2 movie collect 100 crore | Galatta

இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம் 80களின் இறுதியில் இருந்து இன்று வரை ரசிகர்களை ஆச்சர்யமளிக்கும் வகையில் வித்யாசமான கதைகளத்தில் திரைப்படங்களை கொடுத்து இந்தியாவின் மிக முக்கியமான இயக்குனாராக மணிரத்தினம் அவர்கள் தற்போது வலம் வருகிறார். இவர் இயக்கத்தில் இந்தியாவின் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த படங்களில் ஒன்று பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம். காரணம் கடந்த ஆண்டு லைகா தயாரிப்பில் உருவான அப்படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை அனைத்து மொழி ரசிகர்களிடம் ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 28 ம் தேதி பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. இப்படத்தில் சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சோபிதா, சரத் குமார், பிரபு, பார்த்திபன், ஜெயராம், அஷ்வின், விக்ரம் பிரபு, ரகுமான், ஐஸ்வர்யா லக்ஷ்மி, பிரகாஷ் ராஜ்,  உள்ளிட்ட தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். அட்டகாசமான இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே டிரெண்ட் ஆனது என்பது  குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் 28 ம் தேதி உலகமெங்கும் பல பகுதிகளில் ரசிகர்களின் கோலாகல கொண்டாட்டங்களுடன் திரையரங்குகள் நிரம்பி வழிய வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம், தற்போது  இரண்டாவது நாட்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்களை ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர்.

 

Conquering hearts and box office alike! #PS2 garners over a 100 crore collection worldwide#PS2RunningSuccessfully #CholasAreBack#PS2 #PonniyinSelvan2 #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @RedGiantMovies_ @Tipsofficial @tipsmusicsouth @IMAX @primevideoINpic.twitter.com/M2xcZNXzNZ

— Lyca Productions (@LycaProductions) April 30, 2023

இந்நிலையில் இரண்டாவது நாளை நிறைவு செய்து மூன்றாவது நாளில் ஓடிக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது உலகளவில் 100 கோடிக்கு மேல் வசூல் பெற்று சாதனை படைத்துள்ளது.  இதுகுறித்த அறிவிப்பை படக்குழு அட்டகாசமான வீடியோவுடன் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை ரசிகர்கள் அதிகளவு பகிர்ந்து வைரலாகி வருகிறது.

சில பாடல்களை 1மணி நேரத்தில் முடித்திருக்கிறோம்!- பொன்னியின் செல்வன் சுவாரஸ்யங்கள் பகிர்ந்த இளங்கோ கிருஷ்ணன்! ட்ரெண்டிங் வீடியோ
சினிமா

சில பாடல்களை 1மணி நேரத்தில் முடித்திருக்கிறோம்!- பொன்னியின் செல்வன் சுவாரஸ்யங்கள் பகிர்ந்த இளங்கோ கிருஷ்ணன்! ட்ரெண்டிங் வீடியோ

மணிரத்னம் சாருக்கு பாட்டு எழுதுவது ரொம்ப கஷ்டம்!- பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணனின் பொன்னியின் செல்வன் 2 சிறப்பு பேட்டி இதோ!
சினிமா

மணிரத்னம் சாருக்கு பாட்டு எழுதுவது ரொம்ப கஷ்டம்!- பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணனின் பொன்னியின் செல்வன் 2 சிறப்பு பேட்டி இதோ!

உருவாகிறது 'யாத்திசை' பாகம் 2.. இயக்குனர் கொடுத்த அட்டகாசமான அப்டேட் – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..
சினிமா

உருவாகிறது 'யாத்திசை' பாகம் 2.. இயக்குனர் கொடுத்த அட்டகாசமான அப்டேட் – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..