தளபதி விஜய் மற்றும் சூர்யா மீது மீரா மிதுன் எனும் மாடல் வைத்த குற்றச்சாட்டுகள் சில தினங்களாக சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்யவே, மீரா மிதுன் ட்விட்டர் வீடியோ பதிவில் தரக்குறைவாக விமர்சனம் செய்தார். மீரா மிதுனின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. பலரும் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். 

ஆகஸ்ட் 11-ம் தேதி இயக்குநர் பாரதிராஜா கடும் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அவரை தொடர்ந்து நடிகர் விவேக் இன்று காலை தனது பதிவின் மூலம் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் தீனா தனது ட்விட்டர் பதிவில், இது என்னுடைய ட்வீட் இல்லை. இந்த ஃபேக் ID-காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். காரணம் நான் இவ்வளவு டீசண்ட்டாக சொல்ல மாட்டேன். அதுதவிர்த்து நீங்களும் அவ்ளோ ஒர்த் இல்லை என்று அவரது ஸ்டைலில் கூறியுள்ளார். 

தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான தீனா, தனது டைமிங் காமெடியால் ரசிகர்களை ஈர்த்தார். பவர் பாண்டி படத்தில் சிறிய வேடத்தில் நடித்த இவருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. தும்பா படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தாலும், கைதி திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. கார்த்தியுடன் இணைந்து காமெடி சென்டிமென்ட் காட்சியிலும் அசத்தியிருப்பார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார் தீனா. தளபதியோடு தீனா இணைந்து நடிக்கும் முதல் படம் என்பதால், தீனாவின் டைமிங் காமெடியை காண ஆவலில் உள்ளனர் ரசிகர்கள். 

கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரைப்பிரபலங்களில் தீனாவும் ஒருவர். எனவே சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர். ஊரடங்கில் கை சுத்திகரிப்பு இயந்திரத்தை வடிவமைத்து அசத்தினார் தீனா. இனிவரும் காலங்களிலும் பள்ளிக்கூடங்கள், வங்கிகள், ஷாப்பிங் மால்கள் போன்ற இடங்களில் கிருமி தொற்று பரவாமல் இருக்க தீணா வடிவமைத்த இந்த இயந்திரம் நிச்சயம் பயன்படும் என்று பாராட்டியது குறிப்பிடத்தக்கது.