சமைத்து வைத்த சாப்பாட்டை சாப்பிட மறுத்த கணவனை, “கோவை சரளா - வடிவேலு பாணியில்” மனைவி, கணவனை அடி வெளுத்து வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகில் தான், இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

அகமதாபாத் அருகில் உள்ள வஸ்னா பகுதியில் ஹர்ஷத் கோயல் - தாரா தம்பதிகள் வசித்து வந்தனர். 40 வயதான ஹர்ஷத் கோயலுக்கு நீரிழிவு நோய் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

அப்போது, “இனி சாப்பாட்டில் உருளைக் கிழங்கு சேர்த்துக்கொள்ள வேண்டாம்” என்று, மருத்துவர் அவரிடம் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. 

அதன் படி, ஹர்ஷத் கோயல் கடந்த சில மாதங்களாக உணவில் உருளைக் கிழங்கு சேர்த்துக்கொள்ளாமல், உணவு முறையை மாற்றிக் கடைப்பிடித்து வந்தார்.

எனினும், வட நாட்டில் சப்பத்திக்கு உருளைக் கிழங்கு குறுமா தான் மிகவும் விசேசம். கணவனுக்கு ஒற்றுக்கொள்ளாது என்பதால், கடந்த சில நாட்களாக ஹர்ஷத் கோயலின் மனைவி தாராவும், உணவில் உருளைக் கிழங்கு சேர்த்துக்கொள்ளாமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஹர்ஷத் கோயலின் மனைவி தாரா, கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று இரவு சாப்பாட்டிற்கு வாயைக் கட்ட முடியாமல், உருளைக் கிழங்கு சமைத்து வைத்துள்ளார். 

வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய கணவன் ஹர்ஷத் கோயல், இரவு உணவு சாப்பிட வந்துள்ளார். அப்போது, சப்பாத்தி உடன், உருளைக்கிழங்கு குழம்பு இருந்துள்ளது.

இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த கணவன் ஹர்ஷத் கோயல், மனைவியிடம் “இது என்ன சமையல்?” என்று கேட்டுள்ளார், அதற்கு அவர் மனைவி தாராவோ, “சப்பாத்தியும் உருளைக்கிழங்கு குழம்பும்” என்று பதில் அளித்திருக்கிறார்.

இதனால், கோபமடைந்த கணவன் ஹர்ஷத் கோயல், சாப்பிடாமல் எழுந்து சென்றதாகத் தெரிகிறது. அப்போது, அவரது மனைவி தாரா, “ஒரு நாள் சாப்பிட்டா அதெல்லாம் ஒன்றும் பண்ணாது, வந்து சாப்பிடுங்கள்” என்று கூறியதாக தெரிகிறது. இதனால், கணவன் - மனைவி இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

அதனால், கடும் ஆத்திரமடைந்த மனைவி தாரா, அங்குக் கிடந்த ஒரு கம்பை எடுத்துக்கொண்டு, கணவனைச் சரமாரியாக அடி வெளுத்து வாங்கினார்.

மனைவியின் அடி தாங்க முடியாமல், அதில் பயந்து போன கணவன் ஹர்ஷத் கோயல், அவரது மனைவி தாரா மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.