கன்னட சினிமாவின் நட்சத்திர நடிகர்களில் ஒருவரான நடிகர் கிச்சா சுதீப் தென்னிந்திய அளவில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் நான் ஈ & பாகுபலி, தளபதி விஜய்யுடன் இணைந்து புலி ஆகிய திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

கடைசியாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் வெளிவந்த தபாங் 3 திரைப்படத்தில் வில்லனாக அசத்தியிருந்தார் கிச்சா சுதீப். இதனையடுத்து கிச்சா சுதீப்பின் கொட்டிகொப்பா 3 விரைவில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக கிச்சா சுதீப் நடிப்பில் இயக்குனர் அனுப் பண்டாரி எழுதி இயக்கியுள்ள விக்ராந்த் ரோணா திரைப்படம் 3டியில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். கிச்சா கிரியேஷன்ஸ், ஷாலினி ஆர்ட்ஸ் மற்றும் இன்வெனியோ பிலிம்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளன.

ஆக்சன் ஃபேண்டசி அட்வென்ச்சர் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் விக்ராந்த் ரமணா திரைப்படத்திற்கு வில்லியம் டேவிட் ஒளிப்பதிவு செய்துள்ளார் அஜநீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் கிச்சா சுதீப்பின் பிறந்த நாளான இன்று இப்படத்தின் முன்னோட்டமாக புதிய ப்ரோமோ வீடியோ வெளியானது. கலக்கலான அந்த ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.