கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் கிச்சா சுதீப் இயக்குனர் S.S.ராஜமௌலியின் இயக்கத்தில் வெளிவந்த நான் ஈ  திரைப்படத்திற்கு பின் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். முன்னதாக கிச்சா சுதீப் நடித்த விக்ராந்த் ரோணா திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸானது. 

ஃபேண்டஸி-ஆக்ஷன் அட்வென்ச்சர் திரைப்படமாக பிரபல இயக்குனர் அனுப் பண்டாரி எழுதி இயக்கியுள்ள விக்ராந்த் ரோணா திரைப்படத்தில் சுதீப் உடன் இணைந்து நிரூப் பண்டாரி, நீதா அசோக், ஜாக்குலின் பெர்னாண்டஸ், ரவி சங்கர் கௌடா, மதுசூதன் ராவ் மற்றும் வாசுகி வைபவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கிச்சா கிரியேஷன்ஸ், ஷாலினி ஆர்ட்ஸ் மற்றும் இன்வெனியோ பிலிம்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள விக்ராந்த் ரோணா திரைப்படம் ரசிகர்களை கவரும் வகையில் 3டி தொழில்நுட்பத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

வில்லியம் டேவிட் ஒளிப்பதிவில் அஜனீஷ் லோக்நாத் விக்ராந்த் ரோணா படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் விக்ராந்த் ரோணா திரைப்படத்திலிருந்து ரா ரா ராக்கம்மா வீடியோ பாடல் தற்போது வெளியானது. கலக்கலான அந்த ரா ரா ராக்கம்மா வீடியோ பாடல் இதோ…