யாஷ் நடித்த கே ஜி எப் படத்தினை இயக்கி இந்தியா முழுவதும் பிரபலமானவராக மாறியவர் பிரஷாந்த் நீல்.இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.முதல் பாகம் பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து இரண்டாம் பாகத்தின் ரிலீஸை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த படத்துடன் தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படம் வெளியாகவுள்ளது.இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.இந்த படமும் பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கே ஜி எப் 2 படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது.இரண்டு படங்களையும் ரசிக்குமாறு யாஷ் தெரிவித்தார்.இந்த ட்ரைலரை பலரும் பாராட்டி வருகின்றனர்.இந்த ட்ரைலரை பார்த்த பீஸ்ட் இயக்குனர் நெல்சன் ட்ரைலர் பட்டாசாக உள்ளது திரையில் காண ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த பிரஷாந்த் நீல் , நெல்சனுக்கு நன்றி தெரிவித்து விட்டு உங்கள் படத்தையும் காண ஆவலாக இருக்கிறேன்.விஜயை திரையில் எப்படி காட்டியிருக்கிறீர்கள் என்று காண வெயிட் செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.இவரது இந்த ட்வீட் செம வைரலாகி வருகிறது.ஏற்கனவே பிகில்,மாஸ்டர் போன்ற படங்கள் குறித்து இவர் பதிவிட்ட ட்வீட்களும் பிரபலமாகி வருகின்றன.