தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் கார்த்தி இந்த ஆண்டு (2022)வரிசையாக விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.  அடுத்ததாக தனது திரைப்பயணத்தில் 25வது திரைப்படமாக தயாராகும் ஜப்பான் திரைப்படத்தில் தற்போது கார்த்தி நடித்து வருகிறார்.

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, குக்கூ, ஜோக்கர் & ஜப்பான் படங்களின் இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்கும் ஜப்பான் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

ரவிவர்மன் ஒளிப்பதிவில், GV.பிரகாஷ் குமார் இசையமைக்கும் ஜப்பான் படத்திற்கு ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றுகின்றனர்.  தமிழ், மலையாளம், தெலுங்கு & கன்னடம் என 4 மொழிகளில் ஜப்பான் திரைப்படம் வெளியாகவுள்ளது. ஜப்பான் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் 8-ம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்டு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் வெளியான கார்த்தியின் ஜப்பான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜப்பான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து புதிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஜப்பான் திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

#Karthi in & as #Japan shooting on progress in full swing #Karthi25

ஜப்பான் - జపాన్ - ಜಪಾನ್ - ജപ്പാൻ@Karthi_Offl @ItsAnuEmmanuel @Mee_Sunil @vijaymilton @gvprakash @dop_ravivarman @anbariv @philoedit #Banglan @Dir_Rajumurugan @prabhu_sr @DreamWarriorpic @JapanTheMovie pic.twitter.com/ABVd4wZ1uT

— Johnson PRO (@johnsoncinepro) November 23, 2022