தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திர கதாநாயகராக ஜொலிக்கும் தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். முன்னதாக தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கடந்த 2021-ல் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் தளபதி 67 திரைப்படத்தில் இக்கூட்டணி இணைகிறது.

கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து தயாராகும் தளபதி 67 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விரைவில் தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதனிடையே முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தளபதி விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார்.

வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு(2023) ஜனவரியில் பொங்கல் வெளியீடாக வாரிசு திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் வட அமேரிக்க ரிலீஸ் உரிமையை ஷ்லோகா என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு இதோ…
 

Get ready to set the silver screen blaze like never before 🕺🙅🔥

Proud to Announce that We @ShlokaEnts presenting the '5⃣ most awaited films' in North America 🇺🇸

▶️ #Waltairveerayya
▶️ #VeeraSimhaReddy
▶️ #Varisu / #Vaarasudu
▶️ #Kushi
▶️ #RC15 pic.twitter.com/vAOUJqFmGQ

— Shloka Entertainments (@ShlokaEnts) November 21, 2022