தொடர்ந்து ரசிகர்களின் ரசனையை மதிக்கும் தரமான திரைப்படங்களை தயாரித்து வழங்கி தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக திகழும் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு & எஸ்.ஆர்.பிரபு அவர்களின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் கடைசியாக தயாரித்த வட்டம் திரைப்படம் சில தினங்களுக்கு முன் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸானது.

அடுத்ததாக  தங்களது தயாரிப்பில் முக்கிய படைப்பாக விளங்கும் கைதி திரைப்ப்படத்தின் இந்தி ரீமேக்காக அஜய் தேவ்கன் இயக்கி நடிக்கும் போலா திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த வரிசையில் முன்னதாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள கணம் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் எழுதி இயக்கத்தில் சர்வானந்த் கதாநாயகனாக நடித்திருக்கும் கணம் (தெலுங்கில் ஓக்கே ஒக்க ஜீவிதம்) திரைப்படத்தில், ரித்து வர்மா கதாநாயகியாக நடிக்க, அமலா, நாசர், ரமேஷ் திலக், சதீஷ், M.S.பாஸ்கர், ரவி ராகவேந்திரா, வையாபுரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சுஜித் சாரங் ஒளிப்பதிவில், ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்யும் கணம் திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கணம் திரைப்படத்தின் 2வது பாடலாக தாளம் தட்டும் பாடல் வருகிற ஆகஸ்ட் 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் புதிய ப்ரோமோ வீடியோவும் வெளியானது. அந்த ப்ரோமோ வீடியோ…