தமிழ் திரை உலகின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. அடுத்ததாக அஜித்குமார் நடிக்கும் புதிய படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜித்குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். முன்னதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் திருமணம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. புதுமண தம்பதியினரான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அவ்வபோது வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இரு தினங்களுக்கு முன்பு இருவரும் விடுமுறையை கழிக்க பார்சிலோனா புறப்பட்டுச் சென்றனர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற 44-வது கேஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் தொடக்க விழா, நிறைவு விழா மற்றும் நிகழ்ச்சியின் பாடல் ஆகியவற்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் மிகச்சிறப்பாக இயக்கியிருந்தார்.

இந்நிலையில் இந்த செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை இயக்குவதற்காக வாய்ப்பளித்த தமிழக முதலமைச்சர் மதிப்பிற்குரிய.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் உட்பட இந்நிகழ்ச்சியை இயக்குவதற்கு உறுதுணையாக அமைந்த அனைவரையும் குறிப்பிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் நன்றி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை இதோ…

A Big Thanks Note to each and everyone who supported and encouraged us to be a part of this prestigious event 😇😇❤️❤️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 @mkstalin @CMOTamilnadu @Udhaystalin @ikamalhaasan @SMeyyanathan @shiamakofficial #ChessOlympiad2022 #44thchessolympiad2022 @FIDE_chess pic.twitter.com/Gt9pxsQR9i

— Vignesh Shivan (@VigneshShivN) August 13, 2022