மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் முக்கிய படத்தின் பாடல்களை வெளியிட்ட உலகநாயகன் கமல்ஹாசன்! ட்ரெண்டிங் புகைப்படங்கள் உள்ளே

விஜய் சேதுபதி படத்தின் பாடல்களை வெளியிட்ட கமல்ஹாசன்,kamal haasan released the audio of yaadhum oore yaavarum kelir | Galatta

எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தனது தேர்ந்த நடிப்பால் ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடிக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இந்த 2023ம் ஆண்டில் நடிகர் சந்திப் கிஷன் நடிப்பில் ரொமான்டிக் ஆக்சன் படமாக வெளிவந்த மைக்கேல் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து ஒட்டுமொத்த திரையுலகின் கவனத்தையும் ஈர்த்த விடுதலை பாகம் 1 திரைப்படத்தில் பெருமாள் வாத்தியார் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் மிகக் குறைவான காட்சிகளில் நடித்திருந்தாலும் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். தொடர்ந்து இந்த ஆண்டில் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து அதிரடியான திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

அந்த வகையில், இயக்குனர் அட்லி முதல் முறை பாலிவுட்டில் இயக்குனராக களமிறங்கி இருக்கும் ஜவான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஹிந்தி சினிமாவின் நட்சத்திர நடிகர் ஷாரூக் கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஏஜென்ட் வினோத், அந்தாதுன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகும் மேரி கிறிஸ்மஸ் எனும் ஹிந்தி திரைப்படத்தில் கத்ரீனா கைஃப் உடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேரி கிறிஸ்மஸ் திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் வெளியீடாக ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காந்தி டாக்ஸ் எனும் மௌனப் படத்திலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதல் படமான மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்காக உருவாகி இருக்கும் மும்பைக்கர் படத்திலும் விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இதனிடையே நீண்டகாலமாக ரிலீஸுக்காக காத்திருந்த விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளீர் திரைப்படம் வருகிற மே 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தில் இயக்குனர் மகிழ் திருமேனி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், ரகு ஆதித்யா, மதுரா, கனிகா, ரித்விகா மோகன் ராஜா, கரு.பழனியப்பன், சின்னி ஜெயந்த், வித்யா பிரதீப், இமான் இண்ணாச்சி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் கிருஷ்ணா ரோகாந்த் இயக்கியுள்ளார். சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எசக்கி துரை, சினி இன்னோவேஷன்ஸ் உடன் இணைந்து வழங்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்திற்கு வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவில், ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பு செய்ய, நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்நிலையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (மே 5) நடைபெற்றது. உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் பாடல்களை வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் இதோ…
 

#YaadhumOoreYaavarumKelir Audio released by Universal Hero @ikamalhaasan @nivaskprasanna Musical#YOYKfromMay19 @ChandaraaArts @EssakiduraiS @roghanth @akash_megha @SakthiFilmFctry @sakthivelan_b @raguesaki @Riythvika @jayam_mohanraja @Vetri_DOP @AbrahamEditorpic.twitter.com/t7cnE2XtmN

— VijaySethupathi (@VijaySethuOffl) May 5, 2023

வெங்கட் பிரபு - நாக சைதன்யாவின் பக்கா ஆக்ஷன் என்டர்டெய்னராக வரும் கஸ்டடி... அதிரடியான ட்ரெய்லர் இதோ!
சினிமா

வெங்கட் பிரபு - நாக சைதன்யாவின் பக்கா ஆக்ஷன் என்டர்டெய்னராக வரும் கஸ்டடி... அதிரடியான ட்ரெய்லர் இதோ!

'கங்குவா' எனும் டைட்டிலை சூர்யா - சிவா தேர்ந்தெடுக்க காரணம் இதுதான்... ருசிகர தகவல் கொடுத்த தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்! வைரல் வீடியோ
சினிமா

'கங்குவா' எனும் டைட்டிலை சூர்யா - சிவா தேர்ந்தெடுக்க காரணம் இதுதான்... ருசிகர தகவல் கொடுத்த தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்! வைரல் வீடியோ

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 ரிலீஸ் உறுதி... சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி! விவரம் இதோ
சினிமா

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 ரிலீஸ் உறுதி... சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி! விவரம் இதோ