உலகநாயகன் கமல்ஹாசனின் ரசிகர்களுக்கும் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஃபேன்பாய் சம்பவமாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 400 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தில் உலக நாயகனுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.  ஏஜென்ட் டீணா கதாபாத்திரத்தில் அதிரடி காட்டிய நடிகை வசந்தி படம் முடிந்த பிறகும் நினைவில் நிற்க்கிறார்.

குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் சில நிமிடங்களில் தோன்றிய சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு, அனிருதின் பாடல்கள் & பின்னணி இசை மற்றும் மாஸ்டர்ஸ் ஸ்டண்ட் இயக்கத்தில் ஸ்டண்ட் காட்சிகள் என அனைத்தும் திரையரங்குகளில் ரசிகர்களை கொண்டாட வைத்தது.

முன்னதாக விக்ரம் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பின் போது உலக நாயகன் கமல்ஹாசன் 26 PUSH-UPS எடுத்த வீடியோவை விரைவில் வெளியிடுவதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று (ஜூன் 28ம் தேதி) இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படப்பிடிப்பின்போது கமல்ஹாசன் 26 PUSH-UPS எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் அந்த வீடியோ இதோ…
 

@ikamalhaasan sir's video as promised.. He did 26..i missed recording the initial two..
The eagle has landed🔥#Vikram pic.twitter.com/5rdKG9JPoE

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 28, 2022