இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை ஹன்சிகா இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடித்துள்ள MY3 வெப்சீரிஸ் விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸாகவுள்ளது. முன்னதாக இயக்குனர் விஜய் சந்தர் தயாரிப்பில் நடித்துள்ள ஃபேண்டசி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் ஃபேண்டசி ஹாரர் காமெடி திரைப்படமாக உருவாகும் புதிய திரைபடத்திலும் நடித்து வரும் ஹன்சிகா அடுத்ததாக இயக்குனர் J.M.ராஜ சரவணன் இயக்கத்தில் தயாராகும் ரவுடி பேபி திரைப்படத்திலும் நடிக்கிறார்.

மேலும் ஹன்சிகா நடிப்பில் உலக சாதனை முயற்சியாக ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கும் 105 மினிட்ஸ், தெலுங்கில் த்ரில்லர் படமாக தயாராகியுள்ள மை நேம் இஸ் ஸ்ருதி மற்றும் ஆதியுடன் இணைந்து நடித்துள்ள பார்ட்னர் ஆகிய படங்களும் அடுத்தடுத்து ரிலீஸாக தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் இயக்குனர் U.R.ஜமீல் இயக்கத்தில் சிலம்பரசன்.T.R மற்றும் ஹன்சிகா இணைந்து நடித்துள்ள திரைப்படம் மஹா.  நடிகை ஹன்சிகாவின் 50வது திரைப்படமாக வெளிவரும் மஹா படத்தில் ஸ்ரீகாந்த், சனம் செட்டி, தம்பி ராமையா, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மஹா படத்திற்கு R.மதி ஒளிப்பதிவில் ஜிப்ரான் இசையமைத்துள்ளனர்.

ETCETERA என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் V.மதியழகன் தயாரிப்பில் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் ON SKY டெக்னாலஜி வழங்கும் மஹா திரைப்படம் கடந்த ஜூன் 10 ஆம் தேதி ரிலீஸாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு, வருகிற ஜூலை 22ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

The gripping thriller is releasing in theatres on July 22.#MahaFromJuly22nd#maha #hansika50th #str@malikstreams @ihansika @SilambarasanTR_ @Etceteraenter @OnSkyoffl@Sureshmouttou @ghibranofficial @DoneChannel1@dir_URJameel @ahatamil pic.twitter.com/Uwf4YPvFw3

— Etcetera Entertainment (@Etceteraenter) June 28, 2022