கடந்த 2017-ம் ஆண்டு ஹலோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸ்ஸியின் மகள் என்ற அடையாளம் இருந்தாலும், தனது சீரான நடிப்பால் மட்டுமே பிரபலமாகியுள்ளார் கல்யாணி. கடந்த வருடன் கல்யாணிக்கு சிறப்பான ஆண்டு என்றே கூறலாம், சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். அதன் பின் வரனே அவஷ்யமுண்ட் எனும் மலையாள படத்தில் நடித்தார்.  

ஆரம்பமே அமர்க்களமாக முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து பல ரசிகர்களைக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கி வரும் படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர்த்து பிரியதர்ஷன் இயக்கிவரும் சரித்திர திரைப்படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ளார். 

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் கல்யாணி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுதந்திர பறவை போல ஆகாயத்தில் அங்குமிங்கும் பறந்து கொண்டிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஸ்கை டைவிங் செய்து அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையவாசிகளை ஈர்த்து வருகிறது. உள்ள அழுவுறேன், வெளியே சிரிக்கிறேன் என்ற நகைச்சுவையான கேப்ஷனையும் தந்துள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். 

துபாயில் இருந்து கல்யாணி வெளியிட்ட இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அப்படியே ஐபிஎல் போட்டிகளையும் பார்த்து விட்டு வாருங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். கல்யாணி கைவசம் மாநாடு திரைப்படம் உள்ளது.

STR ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படமாகும். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் பாரதிராஜா, SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். 

கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு முன்பு சென்னை VGP கோல்டன் கடற்கரையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஹைதராபாத் விரைவதாக இருந்தனர் படக்குழுவினர். விரைவில் இதன் மீதம் உள்ள படப்பிடிப்பில் கல்யாணி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Smiling outside, crying inside. ✈️☀️☁️🪂

A post shared by Kalyani Priyadarshan (@kalyanipriyadarshan) on