தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவரான அஜித்குமாரின் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் துணிவு வலிமை மேற்கொண்ட பார்வை திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு (2023) பொங்கல் வெளியீடாக ஜனவரில் ரிலீஸ் ஆகிறது.

போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் அஜித்குமார் நடித்திருக்கும் துணிவு திரைப்படத்திற்கு விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார். அஜித் குமாருடன் இணைந்து மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா, சிபி புவனச்சந்திரன், பிக் பாஸ் அமீர், பாவணி, மமதி சாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முன்னணி நடன இயக்குனர் கல்யாண் மாஸ்டர் துணிவு திரைப்படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்

ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் துணிவு திரைப்படத்தின் முதல் பாடலாக ராக் ஸ்டார் அனிருத் பாடியிருக்கும் சில்லா சில்லா பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடன இயக்குனர் கல்யாண் மாஸ்டர் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில் துணிவு திரைப்படம் குறித்தும் அஜித் குமார் அவர்களுடன் பணியாற்றுவது குறித்தும் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் முன்னதாக “வேதாளம் திரைப்படத்தில் சூப்பர் ஹிட் ஆலுமா டோலுமா பாடலின் படப்பிடிப்பின் சமயத்தில் அஜித் குமார் அவர்களுக்கு இரண்டு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. ஆனாலும் காயத்தை பொருட்படுத்தாமல் ஷூட்டிங் தடைபட கூடாது என அனைத்து பணியாளர்கள் மற்றும் தயாரிப்பாளரை மனதில் கொண்டு மருத்துவரை அழைத்து வலிக்குத் தேவையான இன்ஜெக்ஷன் எடுத்துக்கொண்டு நடனம் ஆடினார். பின்னர் இரண்டு கால் மூட்டுகளிலும் அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது” என தெரிவித்துள்ளார். கல்யாண் மாஸ்டர் பேசிய அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.