தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது முதல் திரைப்படமாக இயக்கி வெளிவந்த பரியேறும் பெருமாள் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு விமர்சன ரீதியாகவும் அனைவராலும் பாராட்டப்பட்டது. இதனையடுத்து தனது இரண்டாவது படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்தார் மாரி செல்வராஜ்.

தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணியில் கலைப்புலி.S.தாணு அவர்கள் தயாரிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படமும் அனைவரது கவனத்தையும் ஈர்த்ததோடு மாபெரும் வெற்றி பெற்றது. இதனிடையே தனது மூன்றாவது திரைப்படமாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் மாமன்னன்.

உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து வைகைப்புயல் வடிவேலு, ஃபகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மாமன்னன் திரைப்படம் நிறைவடைந்து தற்போது இறுதிகட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மாமன்னன் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாராகும் நான்காவது திரைப்படம் வாழை. நடிகர் கலையரசன் மற்றும் திவ்யா துரைசாமி ஆகியோருடன் 4 சிறுவர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் வாழை திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் அவரது மனைவி திவ்யா மாரி செல்வராஜ் இணைந்து தயாரிக்கின்றனர்.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கும் வாழை திரைப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நாவி ஸ்டுடியோஸ் இணைந்து வழங்குகின்றன. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க வாழை திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று(நவம்பர் 21) பூஜை உடன் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் வாழைப் படத்தின் முதல் போஸ்டரும் தற்போது வெளியானது. அந்த போஸ்டர் இதோ…
 

சிறந்த கலை படைப்புகளை வெகுஜன மக்களும் விரும்பி கொண்டாடும் வகையில் வழங்கிவரும் இயக்குநர் @mari_selvaraj அவர்களின் அடுத்த படைப்பான #வாழை படத்தின் படப்பிடிப்பை தூத்துக்குடியில் இன்று தொடங்கிவைத்து, குழுவினருக்கு வாழ்த்துதெரிவித்து மகிழ்ந்தோம்.@Music_Santhosh @thenieswar @KalaiActor pic.twitter.com/hjj0JgxUBp

— Udhay (@Udhaystalin) November 21, 2022

Here is the First Look of @mari_selvaraj Directorial #Vaazhai#M4 @navvistudios @disneyplusHSTam @KalaiActor @Nikhilavimal1 @iampriyankanair @dhivya_dhurai @Music_Santhosh @thenieswar @Kumar_gangappan @SPradhaman@dhilipaction @iamSandy_Off @kabilanchelliah @teamaimpr pic.twitter.com/nG9dGLt8Ti

— Udhay (@Udhaystalin) November 21, 2022