தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான ஐசரி.K.கணேஷ் அவர்கள் தயாரிப்பில் கடைசியாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி மெகா ஹிட்டானதை தொடர்ந்து விரைவில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாவது பாகமும் தயாராகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக ஐசரி.K.கணேஷ் அவர்களின் தயாரிப்பில் சுமோ & ஜோஸ்வா - இமை போல் காக்க ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. இந்த வரிசையில் அடுத்ததாக ஐசரி.K.கணேஷ் அவர்களின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் 23வது திரைப்படமாக தயாராகும் புதிய திரைப்படத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடிக்கிறார்.

இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தொடர்ந்து கலக்கி வரும் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த வீரன் திரைப்படம் சமீபத்தில் நிறைவடைந்து அதன் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,இவரது 7-வது திரைப்படமாக தயாராகும் இந்த புதிய #HHT7 திரைப்படத்தை நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் எழுதி இயக்குகிறார்.

மாதேஷ் மாணிக்கம் ஒழிப்பதிவில், GK.பிரசன்னா படத்தொகுப்பு செய்யும் #HHT7 திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். ஒரு பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் கதாபாத்திரத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் #HHT7 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையோடு தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படப்பூஜை விடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த விடியோ இதோ…