முன்னணி இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் பசங்க திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமான நடிகர் விமல், தொடர்ந்து இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் நடித்த களவாணி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சூப்பர் ஹிட்டானதை அடுத்து தமிழ் சினிமாவில் மிகப் பிரபலம் அடைந்தார்.

மேலும் இயக்குனர் கௌரவ் நாராயணன் இயக்கத்தில் தூங்கா நகரம், இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் வாகை சூடவா, இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, இயக்குனர் எழில் இயக்கத்தில் தேசிங்குராஜா என தொடர்ந்து விமல் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றன.

இருப்பினும் கடைசியாக நடிகர் விமல் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களையே சந்தித்தது. முன்னதாக எங்க பாட்டன் சொத்து, சண்டக்காரி, மஞ்சள் குடை, குலசாமி என விமல் நடித்துவரும் படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.

இதனிடையே ஜீவி பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்த புரூஸ்லி படத்தின் இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் விலங்கு வெப் சீரிஸில் விமல் நடித்துள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் விலங்கு வெப் சீரிஸ் நேரடியாக ஜீ 5 பிரீமியம் தளத்தில் வருகிற பிப்ரவரி 18ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

நடிகர் விமலுடன் இணைந்து இனியா, பாலசரவணன், முனீஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள விலங்கு வெப்சீரிஸின் ட்ரைலரை இன்று (பிப்ரவரி 4ஆம் தேதி) நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள விறுவிறுப்பான விலங்கு வெப்சீரிஸின் ட்ரைலர் இதோ...