தமிழ் சினிமாவின் மிக முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அருள்நிதி இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வம்சம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து மௌனகுரு, டிமான்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், K-13 என பல விதமான த்ரில்லர் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறார்.

அந்தவகையில் அடுத்தடுத்து டைரி மற்றும் தேஜாவு என வித்தியாசமான த்ரில்லர் திரைப்படங்கள் அருள்நிதி நடிப்பில் விரைவில் வெளிவர தயாராகி வருகின்றன. முன்னதாக யூடியூபில் எருமசாணி சேனல் மூலம் மிகப் பிரபலமடைந்த விஜய் குமார் ராஜேந்தர் முதல்முறை இயக்குனராக களமிறங்கும் ஆக்சன் த்ரில்லர் திரைப்படமான D-BLOCK திரைப்படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்துள்ளார்.

MNM பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அரவிந்த் சிங் தயாரித்துள்ள D-BLOCK திரைப்படத்தை சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது. அருள்நிதியுடன் இணைந்து அவந்திகா மிஸ்ரா, கருபழனியப்பன், சந்திரன்தீப், தலைவாசல் விஜய், ரமேஷ் கண்ணா, உமா ரியாஸ்கான், விஜயகுமார் ராஜேந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அரவிந்த் சிங் ஒளிப்பதிவில் கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்துள்ள D-BLOCK படத்திற்கு எத்தனை யோகன் பாடல்களுக்கு இசை அமைக்க கௌஷிக் கிருஷ் பின்னணி இசை சேர்த்துள்ளார். முன்னதாக வெளிவந்த D-BLOCK படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது D-BLOCK படத்தில் இருந்து ஐஸ் கட்டி குருவி எனும் பாடல் வெளியானது. பாடகர் பிரதீப் குமார் குரலில் வெளிவந்திருக்கும் ஐஸ் கட்டி குருவி பாடல் இதோ…