சூப்பர் ஸ்டாருக்கு செம்ம சர்ப்ரைஸ் கொடுத்த கலாநிதி மாறன்... தொடரும் ஜெயிலர் பட வெற்றி கொண்டாட்டத்தின் வைரல் வீடியோ!

ஜெயிலர் வெற்றிக்காக சூப்பர் ஸ்டாருக்கு BMW கார் பரிசளித்த கலாநிதி மாறன்,kalanithi maran gifted bmw x7 to rajinikanth for jailer success | Galatta

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அட்டகாசமான சர்ப்ரைஸ் பரிசு தந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள். தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தனது தயாரிப்பில் முதல் படமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தை தயாரித்த கலாநிதி மாறன் அவர்கள் அடுத்தடுத்து பேட்ட மற்றும் அண்ணாத்த ஆகிய திரைப்படங்களை தயாரித்த நிலையில், நான்காவது முறையாக ஜெயிலர் திரைப்படத்தையும் தயாரித்தார். முதல் முறை இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் அவர்கள் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில், சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், மிர்னா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் படம் ரிலீஸானது. உலக அளவில் முதல் வார முடிவில் ஜெயிலர் திரைப்படம் 375.40 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் வாரத்தில் அதிகபட்சமாக வசூலித்த படம் ஜெயிலர் தான். அதேபோல் இரண்டாவது வார முடிவில் ஜெயிலர் திரைப்படம் கிட்டத்தட்ட 525 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் சாதனை படைத்தது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் இதுவரை எந்த தென்னிந்திய திரைப்படமும் படைத்தராத அதிகபட்ச வசூல் சாதனை படைத்து ஜெயிலர் திரைப்படம் புதிய அதிரடி சாதனையும் தற்போது படைத்திருப்பதாக வெளிநாடுகளில் ஜெயிலர் திரைப்படத்தை வெளியிட்டு இருக்கும் ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இதனிடையே சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு காசோலை கொடுத்தார். அதைத்தொடர்ந்து இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ கார் ஒன்றை கலாநிதி மாறன் அவர்கள் பரிசாக வழங்கியிருக்கிறார். ரஜினிகாந்த் அவர்களுக்கு சர்ப்ரைஸாக பிஎம்டபிள்யூ ஐ 7 & பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 ஆகிய இரண்டு கார்களையும் நிறுத்தி அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அதை தேர்ந்தெடுக்க சொல்ல பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 காரை சூப்பர் ஸ்டார் தேர்ந்தெடுக்க கலாநிதி மாறன் அவர்கள் அதன் சாவியை சூப்பர் ஸ்டார் அவர்களிடம் கொடுக்கும் வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. அந்த வைரல் வீடியோ இதோ... 
 

#JailerSuccessCelebrations continue! Superstar @rajinikanth was shown various car models and Mr.Kalanithi Maran presented the key to a brand new BMW X7 which Superstar chose. pic.twitter.com/tI5BvqlRor

— Sun Pictures (@sunpictures) September 1, 2023