தனுஷின் கேப்டன் மில்லர் பட முதல் பாடல் ரிலீஸ் திட்டம்... ஜீவி பிரகாஷ் கொடுத்த மாஸ் அப்டேட்! ட்ரெண்டிங் வீடியோ இதோ

தனுஷின் கேப்டன் மில்லர் படம் முதல் பாடல் குறித்து பேசிய ஜீவி பிரகாஷ்,gv prakash opens about dhanush in captain miller first single release | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார், தனுஷ் நடிப்பில் அடுத்து வெளிவரவருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்த ருசிகர தகவலை பகிர்ந்து கொண்டார். இந்த 2023 ஆம் ஆண்டில் இதுவரை ஜீவி பிரகாஷ் குமார் இசையில் வாத்தி மற்றும் ருத்ரன் ஆகிய திரைப்படங்கள் வெளிவந்த நிலையில், அடுத்தடுத்து தங்கலான், ஜப்பான், மார்க் ஆண்டனி, காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் ஆகிய படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. இதுபோக சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக், வாடிவாசல், SK21 என பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் படங்களுக்கும் ஜீவி பிரகாஷ் தான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த வரிசையில் தனுஷ் நடிப்பில் 1930-களில் நடைபெறும் கதைக்களத்தை கொண்ட பீரியட் ஆக்சன் படமாக தயாராகும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கும் ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ராக்கி மற்றும் சாணிக் காயிதம் என தனக்கென தனி பாணியில் மிரட்டலான ஆக்சன் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல், பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் சொன்னேன்பிலிக் ஆகியோர் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் நாகூரான் படத்தொகுப்பு செய்கிறார். தென்காசியை தொடர்ந்து தற்போது மதுரையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜூன் மாதத்திலும் டீசர் வரும் ஜூலை மாதத்திலும் வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்துள்ள நிலையில், முதல் பாடல் ரிலீஸ் குறித்த திட்டத்தை ஜீவி பிரகாஷ் குமார் பகிர்ந்து கொண்டார். முன்னதாக இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் நடத்தும் “ஆயிரத்தில் ஒருவன்” எனும் இசை கச்சேரி வருகிற மே 27 ஆம் தேதி சனிக்கிழமை கோயம்புத்தூரில் நடைபெறுகிறது. இது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய போது, “இந்த கச்சேரியில் உங்களது புதிய பாடல் ஏதேனும் வெளியிட வாய்ப்பு இருக்கிறதா? என கேட்டபோது, “பாடல் ஒன்றை வெளியிடலாமா என யோசித்திருந்தோம்.. ஆனால் அது ரிலீஸ் நேரத்தை ஒட்டிய ஒரு விஷயம் அல்லவா? கேப்டன் மில்லரின் பாடல் ஒன்றை வெளியிடலாமா என்ற ஒரு எண்ணம் இருந்தது. படத்தின் ரிலீஸ் தேதி என்று ஒன்று இருக்கிறது. அது கொஞ்சம் தள்ளி இருப்பதனால் ஒரு புது பாடல் வெளியிடக்கூடிய தருணம் இந்த தேதியில் இல்லை” என பதில் அளித்துள்ளார். முன்பே தெரிவித்தபடி ஜூன் & ஜூலையில் கேப்டன் மில்லர் பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியான பிறகு முதல் பாடலும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஜீவி பிரகாஷ் குமார் பேசிய வீடியோ இதோ…

 

சினிமா

"இறுதிச் சடங்குகள் சென்னையில் தான் நடத்த வேண்டும் என்றார்!"- சரத்பாபுவின் கடைசி நிமிடங்கள் குறித்து மனம் திறந்த சகோதரர்! வீடியோ உள்ளே

அசோக் செல்வன்-சரத்குமாரின் அதிரடியான போர் தொழில்... தெகிடி வரிசையில் புதிய சஸ்பென்ஸ் த்ரில்லர் பட விறுவிறுப்பான டீசர் இதோ!
சினிமா

அசோக் செல்வன்-சரத்குமாரின் அதிரடியான போர் தொழில்... தெகிடி வரிசையில் புதிய சஸ்பென்ஸ் த்ரில்லர் பட விறுவிறுப்பான டீசர் இதோ!

சினிமா

"மலேசியாவில் மாஸ் காட்டிய விஜய்!"- ஷூட்டிங்கிற்கு முன்பே தளபதி68 இன்டர்நேஷனல் ப்ரோமோஷன் ஆரம்பம்! விவரம் இதோ