சிவகார்த்திகேயனின் மாவீரன் பட வேற லெவல் அப்டேட் கொடுத்த இயக்குனர் மிஷ்கின்... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் வீடியோ இதோ!

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் பற்றி பேசிய மிஷ்கின்,mysskin about his character in maaveeran movie sivakarthikeyan | Galatta

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாராகி வரும் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் குறித்த முக்கிய தகவல்களை இயக்குனர் மிஷ்கின் பகிர்ந்து கொண்டார். தமிழ் சினிமாவின் இன்றியமையாத கதாநாயகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக முதல் முறையாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் R.ரவிசங்கர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக தயாராகி இருக்கும் அயலான் திரைப்படத்தின் VFX பணிகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் அயலான் திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கும் நிலையில் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக அயலான் படம் குழுவினர் அறிவித்துள்ளனர். 

இந்த வரிசையில் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் SK21 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கும் SK21 திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, SK21 திரைப்படம் பூஜை உடன் தொடங்கப்பட்டது.  இதனிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளிவர தயாராகி இருக்கும் திரைப்படம் மாவீரன். யோகி பாபு நடிப்பில் வெளிவந்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த, மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் சரிதா, இயக்குனர் மிஷ்கின், பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க தமிழில் மாவீரன் , தெலுங்கில் மஹாவீருடு என தயாராகும் இப்படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பரத் ஷங்கர் இசையமைக்கிறார். மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீசீசில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் ஜூலை 14ம் தேதி தமிழில் மாவீரன் தெலுங்கில் மஹாவீருடு என இரு மொழிகளில் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகான (OTT) டிஜிட்டல் உரிமத்தை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

இந்நிலையில், தற்போது கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய இயக்குனர் மிஷ்கின் மாவீரன் திரைப்படம் குறித்தும் பேசினார். அப்படி பேசுகையில், “மாவீரன் படத்தில் தான் அந்த கெட்டப் இருந்தது இப்போது கிளீன் ஷேவ் செய்து விட்டேன் ஒரு வருடத்திற்கு பிறகு… மாவீரன் திரைப்படம் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. மாவீரன் படத்தில் தான் முழு படத்திலும் வில்லனாக நடித்து இருக்கிறேன். சிவகார்த்திகேயனுடன் நடித்தது மிகவும் சந்தோஷம். சிவகார்த்திகேயன் ரொம்ப நல்ல பையன் ரொம்ப தன்மையான பையன்.” என பேசியுள்ளார் இயக்குனர் மிஸ்டின் பேசிய அந்த முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

தனுஷின் கேப்டன் மில்லர் பட முதல் பாடல் ரிலீஸ் திட்டம்... ஜீவி பிரகாஷ் கொடுத்த மாஸ் அப்டேட்! ட்ரெண்டிங் வீடியோ இதோ
சினிமா

தனுஷின் கேப்டன் மில்லர் பட முதல் பாடல் ரிலீஸ் திட்டம்... ஜீவி பிரகாஷ் கொடுத்த மாஸ் அப்டேட்! ட்ரெண்டிங் வீடியோ இதோ

சக ரைடருக்கு BMW சூப்பர் பைக்கை சர்ப்ரைசாக பரிசளித்த அஜித் குமார்... வைரலாகும் புகைப்படங்கள் இதோ!
சினிமா

சக ரைடருக்கு BMW சூப்பர் பைக்கை சர்ப்ரைசாக பரிசளித்த அஜித் குமார்... வைரலாகும் புகைப்படங்கள் இதோ!

RJபாலாஜியின் அடுத்த பக்கா என்டர்டெய்னர் சிங்கப்பூர் சலூன்... அதிரடி ரிலீஸ் அறிவிப்பு - கலக்கலான புது போஸ்டர் இதோ!
சினிமா

RJபாலாஜியின் அடுத்த பக்கா என்டர்டெய்னர் சிங்கப்பூர் சலூன்... அதிரடி ரிலீஸ் அறிவிப்பு - கலக்கலான புது போஸ்டர் இதோ!