டி ப்ளாக் இயக்குனரும் யூட்யூபருமான எருமசாணி விஜய் தன் காதலி நக்ஷத்ராவை கரம் பிடித்தார்... வைரலாகும் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோ இதோ!

கோலாகலமாக நடந்த எருமசாணி விஜய் நக்ஷத்ரா மூர்த்தி திருமணம்,Eruma saani vijay nakshathra murthy marriage photos and videos | Galatta

பிரபலமான யூடியூபரும் திரைப்பட இயக்குனருமான எரும சாணி விஜயின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. தனது நீண்ட நாள் காதலியான நக்ஷத்ரா மூர்த்தியை, எரும சாணி விஜய் கரம் பிடித்தார். லட்சக்கணக்கான யூடியூப் ஃபாலோர்களும் ரசிகர்களும் மற்றும் பிரபலங்களும் எரும சாணி விஜய் - நக்ஷத்ரா மூர்த்தியின் திருமணத்திற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக தனது எரும சாணி எனும் யூட்யூப் சேனல் வாயிலாக பல வீடியோக்கள் வெளியிட்டு தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்த விஜயகுமார், எரும சாணி யூட்யூப் சேனல் மூலம் கிடைத்த புகழின் காரணமாக எரும சாணி விஜய் என்றே பலராலும் அறியப்படுகிறார். இந்த தலைமுறை ரசிகர்களுக்கு தகுந்த மாதிரி எரும சாணி விஜய் வெளியீடும் ஒவ்வொரு வீடியோக்களும் ட்ரெண்ட் ஆகின. இவரது கலகலப்பான வீடியோக்களுக்கென தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உண்டு கிட்டத்தட்ட யூடியூபில் இவரது எரும சாணி சேனலை 36 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யூடியூபில் இருந்து சினிமாவில் நுழைந்த எரும சாணி விஜயகுமார் இசையமைப்பாளர் நடிகர் என கலக்கி வரும் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த மீசையை முறுக்கு மற்றும் நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் அறிமுகமானார். இதனை அடுத்து இயக்குனராக அவதாரம் எடுத்த எரும சாணி விஜயகுமார் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த டி பிளாக் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் களமிறங்கினார். தனக்கென தனி பாணியில் தொடர்ச்சியாக பல வித்தியாசமான திரில்லர் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் அருள்நிதி நடிப்பில் வித்தியாசமான சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக எரும சாணி விஜய் இயக்கத்தில் வெளிவந்த டி பிளாக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து எரும சாணி விஜயகுமார் இயக்கத்தில் வரும் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், அவரது நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு(2022) நடைபெற்றது.

தனது நீண்ட நாள் காதலியான நக்ஷத்ரா மூர்த்தியுடன் எரும சாணி விஜயின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பிரபலமான ஆடை வடிவமைப்பாளராகவும் மாடலாகவும் திகழும் நக்ஷத்ரா மூர்த்தி மற்றும் எரும சாணி விஜய் இருவரின் நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் நடைபெற்றதை தொடர்ந்து, இந்த 2023 ஆம் ஆண்டு தற்போது இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. நண்பர்கள் உறவினகள் ஒன்று கூட அட்டகாசமாக நடந்த இவர்களது திருமணத்தில் பிரபலமான யூடியூப் நட்சத்திரங்களும் திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டனர். புதுமண தம்பதிகளாக வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகரும் எரும சாணி விஜய் மற்றும் நக்ஷத்ரா மூர்த்தி இருவருக்கும் கலாட்டா குழுமம் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. முன்னதாக தங்களது திருமண புகைப்படங்களையும் வீடியோக்களையும் எரும சாணி விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் எரும சாணி விஜயின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.
 

 

View this post on Instagram

A post shared by Eruma saani Vijay (@vijayviruz)

 

View this post on Instagram

A post shared by Eruma saani Vijay (@vijayviruz)

RJபாலாஜியின் அடுத்த பக்கா என்டர்டெய்னர் சிங்கப்பூர் சலூன்... அதிரடி ரிலீஸ் அறிவிப்பு - கலக்கலான புது போஸ்டர் இதோ!
சினிமா

RJபாலாஜியின் அடுத்த பக்கா என்டர்டெய்னர் சிங்கப்பூர் சலூன்... அதிரடி ரிலீஸ் அறிவிப்பு - கலக்கலான புது போஸ்டர் இதோ!

சினிமா

"இறுதிச் சடங்குகள் சென்னையில் தான் நடத்த வேண்டும் என்றார்!"- சரத்பாபுவின் கடைசி நிமிடங்கள் குறித்து மனம் திறந்த சகோதரர்! வீடியோ உள்ளே

அசோக் செல்வன்-சரத்குமாரின் அதிரடியான போர் தொழில்... தெகிடி வரிசையில் புதிய சஸ்பென்ஸ் த்ரில்லர் பட விறுவிறுப்பான டீசர் இதோ!
சினிமா

அசோக் செல்வன்-சரத்குமாரின் அதிரடியான போர் தொழில்... தெகிடி வரிசையில் புதிய சஸ்பென்ஸ் த்ரில்லர் பட விறுவிறுப்பான டீசர் இதோ!