"தளபதி விஜயின் லியோ உடன் மோதும் டைகர்!"- முன்னணி நட்சத்திர நடிகரின் பிரம்மாண்டமான PAN INDIA படம்... மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் GLIMPSE இதோ!

ரவி தேஜாவின் டைகர் நாகேஸ்வரராவ் பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு,ravi teja in tiger nageswara rao movie first look out now | Galatta

தெலுங்கு சினிமாவின் மாஸ் மகாராஜா என கொண்டாடப்படும் நடிகர் ரவிதேஜாவின் திரை பயணத்தில் முதல் PAN INDIA படமாக பிரம்மாண்டமாக தயாராகி வரும் டைகர் நாகேஸ்வர ராவ் திரைப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் GLIMPSE வீடியோ தற்போது வெளியானது. ரவி தேஜாவின் மிரட்டலான ஆக்ஷனில் வெளிவரும் டைகர் நாகேஸ்வரராவ் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டில் அக்டோபர் 20ஆம் தேதி ஆயுதபூஜை வெளியீடாக ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் முன்னதாக அக்டோபர் 19ஆம் தேதி தளபதி விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே தளபதி விஜயின் லியோ படமும் மாஸ் மகாராஜா ரவி தேஜாவின் டைகர் நாகேஸ்வரராவ் படமும் பாக்ஸ் ஆபிஸில் ஆரோக்கியமான போட்டியில் நேருக்கு நேர் மோதுகின்றன

ஆந்திராவின் ஸ்டூரத்புரம் பகுதியில் 1970களில் மிகப் பிரபலமான மற்றும் பயங்கரமான கொள்ளைக்காரனாக வலம் வந்த நாகேஸ்வர ராவ்-ன் பயோபிக் படமாக தயாராகும் டைகர் நாகேஸ்வர ராவ் திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி கிருஷ்ண நாயுடு இயக்குகிறார். ரவி தேஜா உடன் இணைந்து காயத்ரி பரத்வாஜ், நிப்பூர் சனான் உள்ளிட்ட பலர் டைகர் நாகேஸ்வர ராவ் திரைப்படத்தில் நடிக்கின்றனர். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அபிஷேக் அகர்வால் தயாரிக்க, பிரம்மாண்ட திரைப்படமாக  தயாராகும் டைகர் நாகேஸ்வர ராவ் திரைப்படத்திற்கு R.மதி ஒளிப்பதிவு ஒளிப்பதிவு செய்ய, ஜீவி ப்ரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

முன்னதாக இந்த டைகர் நாகேஸ்வர ராவ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ஐந்து சூப்பர் ஸ்டார் நடிகர்கள் அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதாவது ரவி தேஜாவின் டைகர் நாகேஸ்வர ராவ்-ஐ அறிமுகப்படுத்த அந்த ஐந்து நட்சத்திர நடிகர்களும் ஐந்து மொழிகளில் அவர்களது பின்னணி குரல் கொடுத்துள்ளனர். அந்த வகையில் தமிழில் நடிகர் கார்த்தி, தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ், கன்னடத்தில் நடிகர் சிவ ராஜ்குமார், மலையாளத்தில் துல்கர் சல்மான் மற்றும் ஹிந்தியில் ஜான் ஆப்ரஹாம் ஆகியோர் டைகர் நாகேஸ்வர ராவ் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவிற்காக குரல் கொடுத்துள்ளனர். இந்நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த டைகர் நாகேஸ்வர ராவ் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியானது.

“அது 70களின் தொடக்கம்… வங்காள கடற்கரையில் ஒரு சிறிய கிராமம்… இந்தப் பிரபஞ்சத்தை பயமுறுத்தும் இருள் கூட அங்கு இருக்கும் மக்களை பார்த்து பயப்படும்… தடதடவென ஓடும் ரயில் அந்த இடத்தின் எல்லையை நெருங்கும் போதே நடுங்கும்… அந்த ஊரின் மைல்கல் தென்பட்டதும் ஜனங்களுடைய பாதம் தடுமாறும்… இந்தியாவின் குற்றங்களின் தலைநகரம்! THE CRIME CAPITAL OF SOUTH INDIA… ஸ்டூவர்ட்புரம், அந்த இடத்திற்கு இன்னொரு பேரும் இருக்கு TIGER ZONE - THE ZONE OF TIGER NAGESHWARA RAO” என்ற கார்த்தியின் பின்னணி குரலிலும், "மான்கள வேட்டையாடுற புலிய பார்த்திருப்ப புலிகள வேட்டையாடுற புலிய எப்பயாவது பார்த்திருக்கியா?" என்ற மிரட்டலான பன்ச் வசனத்தோடு வெளிவந்த டைகர் நாகேஸ்வர ராவ் ஃபர்ஸ்ட் லுக் GLIMPSE வீடியோ இதோ…
 

சக ரைடருக்கு BMW சூப்பர் பைக்கை சர்ப்ரைசாக பரிசளித்த அஜித் குமார்... வைரலாகும் புகைப்படங்கள் இதோ!
சினிமா

சக ரைடருக்கு BMW சூப்பர் பைக்கை சர்ப்ரைசாக பரிசளித்த அஜித் குமார்... வைரலாகும் புகைப்படங்கள் இதோ!

RJபாலாஜியின் அடுத்த பக்கா என்டர்டெய்னர் சிங்கப்பூர் சலூன்... அதிரடி ரிலீஸ் அறிவிப்பு - கலக்கலான புது போஸ்டர் இதோ!
சினிமா

RJபாலாஜியின் அடுத்த பக்கா என்டர்டெய்னர் சிங்கப்பூர் சலூன்... அதிரடி ரிலீஸ் அறிவிப்பு - கலக்கலான புது போஸ்டர் இதோ!

சினிமா

"இறுதிச் சடங்குகள் சென்னையில் தான் நடத்த வேண்டும் என்றார்!"- சரத்பாபுவின் கடைசி நிமிடங்கள் குறித்து மனம் திறந்த சகோதரர்! வீடியோ உள்ளே