நமது வாழ்வில் அன்றாடம் நடக்கும் விஷயங்களை பல சாதாரண மக்களுக்கும் புரியும்படி எடுத்துரைப்பது செய்திகள்.செய்திதாள் தொடங்கி பிரேக்கிங் நியூஸ் வரை பல பரிமாணங்களை செய்தி நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன.டிவிகளில் தினம் நடக்கும் நிகழ்வுகளை அறிந்துகொள்ள மக்கள் செய்திகளை பார்ப்பது வழக்கம்.

காலப்போக்கில் செய்திகள் மட்டுமின்றி செய்தி வாசிப்பாளர்களும் அவர்களது தமிழ் உச்சரிப்புகளும் , அவர்களது உடைகளும் ரசிகர்களை வெகுவாக கவரத்தொடங்கினர்.அப்படி செய்திவாசிப்பாளராக இருந்து பலரும் மக்கள் மத்தியில் பிரபலமானவர்களாக மாறியுள்ளனர்.

செய்திவாசிப்பாளராக இருந்து பலரும் சினிமா ஹீரோயின்களாகவும் , சீரியல் நாயகிகளாகவும் அவதரித்தும் உள்ளனர்.செய்திவாசிப்பாளர்கள் பலர் இளைஞர்களின் மனம் கவர்ந்த கனவுகன்னியாகவும் வலம்வருவார்கள் இவர்கள் குறித்த பல மீம்களை சமூகவலைத்தளங்களில் காண முடியும்.

அப்படி கலைஞர் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக இருந்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் கிரிஜா கண்ணன்.இவருக்கு தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது.இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.