உணவையும்,சமையலையும் மையப்படுத்தி பல மொழிகளில் பல முன்னணி சேனல்களில் உலகம் முழுவதும் பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தன.குறிப்பாக தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகி வந்த உணவு சம்மந்தமான நிகழ்ச்சிகள் பெண்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தன.

விஜய் டிவியின் புதிய முயற்சியாக ஒளிபரப்பான நிகழ்ச்சி குக் வித் கோமாளி.சமையல் நிகழ்ச்சியில் காமெடியன்களை சேர்த்து கலக்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.இந்த நிகழ்ச்சி பெரிய வரவேற்பை பெற்றது.இந்த தொடர் மூலம் பலரும் பிரபலமானவர்களாக மாறியுள்ளனர்.

தற்போது இதேபோல நகைச்சுவையான சமையல் நிகழ்ச்சி ஒன்றை கலைஞர் டிவி ஒளிபரப்பவுள்ளனர்.குக்கிங் கில்லாடிஸ் என்று இந்த நிகழ்ச்சி பெயரிடப்பட்டுள்ளது.குக் வித் கோமாளி போல செம ஜாலியான நிகழ்ச்சியாக இது இருக்கும் என்று தெரிகிறது ஆனால் போட்டி போடும் நிகழ்ச்சியாக இது இருக்குமா என்பது வரும் நாட்களில் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியை பிரபல சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்.இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.தற்போது இந்த தொடரின் செம ரகளையான அறிவிப்பு ப்ரோமோ வெளியாகியுள்ளது.இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்