இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவராக ஜொலிக்கும் நடிகர் தனுஷ் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளிலும் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் பட இயக்குனர்கள் ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தி க்ரே மேன் திரைப்படம் நிறைவடைந்து விரைவில் நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் ரிலீஸாகவுள்ளது.

முன்னதாக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கதில் தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸாக உள்ள நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகிவரும் வாத்தி (SIR) மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள திருச்சிற்றம்பலம் படத்திலும் நடித்துள்ளார் தனுஷ்.

இதனிடையே மீண்டும் தனது சகோதரரும் இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இணைந்துள்ள திரைப்படம் நானே வருவேன். அசுரன் மற்றும் கர்ணன் ஆகிய படங்களை தொடர்ந்து தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் நடிகை இந்துஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நானே வருவேன் திரைப்படத்தில் ஹீரோ வில்லன் என இரட்டை வேடத்தில் தனுஷ் நடித்துள்ளார். இதில் ஒரு கதாபாத்திரத்திற்காக நடிகர் தனுஷ் வில்வித்தை பயின்று வருகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.  

சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இதன் படப்பிடிப்பு ஊட்டியில் தொடர்கிறது. இந்தப் படப்பிடிப்பில் நடிகர் தனுஷ் அவரது மூத்த மகன் யாத்ராவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ…
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhanush (@dhanushkraja)