இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகர் துல்கர் சல்மான் மலையாள திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் பல வித்தியாசமான கதை களங்களில் சிறந்த திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

முன்னதாக துல்கர் சல்மான் நடிப்பில் கிரைம் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்த குரூப் திரைப்படம் இந்தியாவின் ஐந்து முன்னணி மொழிகளில் வெளிவந்து சூப்பர் ஹிட்டானது. இதனை அடுத்து மலையாளத்தில் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் துல்கர் சல்மான் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள சல்யூட் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

தொடர்ந்து பாலிவுட்டில் இயக்குனர் பால்கி இயக்கத்தில் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் சுப்-ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்டிஸ்ட்ஸ் மற்றும் தெலுங்கில் இயக்குனர் ஹனு ராகவப்புடி இயக்கத்தில் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள யுத்தம் ராசினா பிரேம கதா ஆகிய திரைப்படங்கள் துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் இந்திய திரையுலகில் முன்னணி நடன இயக்குனரான பிருந்தா முதல்முறை இயக்குனராக களமிறங்கியுள்ள ஹே சினாமிகா படத்தில் துல்கர் சல்மான், காஜல்அகர்வால் & அதிதி ராவ் ஹைதாரி இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜியோ ஸ்டுடியோஸ், குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து ஹே சினாமிகா படத்தை தயாரித்துள்ளனர்.

ஹே சினாமிகா படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுத, ப்ரீத்தா ஜெயராம் ஒளிப்பதிவில், கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். வருகிற மார்ச் 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள ஹே சினாமிகா திரைப்படத்தின் அசத்தலான ட்ரைலர் தற்போது வெளியானது. அந்த ட்ரைலர் இதோ…