தமிழ் சின்னத்திரையில் கடந்த சில வருடங்களாக பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் வைஷ்ணவி அருள்மொழி.கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மலர் என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார் வைஷ்ணவி அருள்மொழி.

அடுத்தகாக சன் டிவியின் சூப்பர்ஹிட் தொடரான அழகு தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பொண்ணுக்கு தங்க மனசு சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார் வைஷ்ணவி.

இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2-வில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் வைஷ்ணவி.சீரியல்களில் அசத்தி வந்த வைஷ்ணவி சந்தானம் நடிப்பில் தயாராகியுள்ள சபாபதி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து தனது வெள்ளித்திரை என்ட்ரியை சமீபத்தில் கொடுத்துள்ளார்.

தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த தொடரில் ராஜாமகள் உள்ளிட்ட தொடர்களில் நடித்த விஜய் ஹீரோவாக நடிக்கிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.பேரன்பு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரின் அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.