தமிழ் திரையுலகில் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் விக்னேஷ் சிவன். இயக்கம் அல்லாது பாடலாசிரியர், நடிகர் என பன்முக திறமையுள்ளவர். இவரது இயக்கத்தில் வெளிவந்த நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார். 

Kaathu Vaakula Rendu Kadhal Movie Shoot Update

இந்நிலையில், விஜய் சேதுபதி வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் எனும் படத்தை துவங்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க நயன்தாரா மற்றும் சமந்தா நாயகிகளாக நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இணைகிறது. அதுமட்டுமல்லாமல் இரண்டு நாயகிகள் கொண்ட காதல் கதையாக இருப்பதால் கூடுதல் சுவாரஸ்யம் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Kaathu Vaakula Rendu Kadhal Movie Shoot Update

பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று இப்படத்தின் டைட்டில் லுக் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் துவங்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.