விஜய் ஆண்டனியின் பக்கா மாஸ் அவதாரமாக வரும் பிச்சைக்காரன் 2... கவனத்தை ஈர்க்கும் மிரட்டலான ட்ரெய்லர் இதோ!

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 பட ட்ரெய்லர் வெளியீடு,vijay antony in pichaikkaran 2 movie trailer out now | Galatta

தனக்கென தனி பாணியில் ரசிகர்களை கவரும் வகையில் விசித்திரமான வார்த்தைகள் கொண்ட பாடல்களை கொடுத்து ட்ரெண்டான இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, மனதை மயக்கும் பல மெலடி பாடல்களையும் கொடுத்து மக்களின் இதயங்களில் இடம் பிடித்தவர். தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்த விஜய் ஆண்டனி அவர்கள் நான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் களமிறங்கினார். தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன், கொலைகாரன், கோடியில் ஒருவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து நடிகராகவும் முத்திரை பதித்த விஜய் ஆண்டனி அவர்கள் நடிப்பில் கடைசியாக கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி தமிழரசன் திரைப்படமும் ரிலீஸ் ஆனது. முன்னதாக இயக்குனர் A.செந்தில்குமார் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக விஜய் ஆண்டனி நடித்துள்ள காக்கி, மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்துள்ள ஆக்சன் திரில்லர் திரைப்படமான அக்னி சிறகுகள் ஆகிய இரண்டு திரைப்படங்களும் நீண்ட காலமாக ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. 

இதனைத் தொடர்ந்து இயக்குனர் பாலாஜி K குமார் இயக்கத்தில் க்ரைம் திரில்லர் படமாக தயாராகியுள்ள கொலை, ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள மழை பிடிக்காத மனிதன், தமிழ் படம் படத்தின் இயக்குனர் CS.அமுதன் இயக்கத்தில் அதிரடியான பொலிட்டிக்கல் த்ரில்லர் படமாக தயாராகியுள்ள ரத்தம் மற்றும் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் வள்ளி மயில் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து விஜய் ஆண்டனி அவர்களின் நடிப்பில் வரிசையாக வெளிவந்து மக்களை மகிழ்விக்க உள்ளன. இந்த வரிசையில் தனது திரைப் பயணத்தில் இயக்குனர் சசி இயக்கத்தில் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான பிச்சைக்காரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தையும் உருவாக்கியுள்ளார். இதுவரை இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வந்த விஜய் ஆண்டனி அவர்கள் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். 

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி அவர்களின் தயாரிப்பில் விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில், காவியா தப்பர் கதாநாயகியாக நடிக்க, ராதா ரவி, மன்சூர் அலிகான், ஹரிஷ் பெரடி, ஜான் விஜய், தேவ் கில், யோகி பாபு, YG.மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஓம் நாராயணன் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனியே படத்தொகுப்பும் செய்து இசையமைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயம் அடைந்த விஜய் ஆண்டனி அவர்கள் பின்னர் தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியீடாக பிச்சைக்காரன் 2 படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். பின் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி போன நிலையில், வருகிற மே 19ஆம் தேதி பிச்சைக்காரன் 2 திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் மாஸான ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே மிகப் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. மிரட்டலான அந்த ட்ரெய்லர் இதோ…

 

மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் தளபதி விஜய் திடீர் சந்திப்பு... காரணம் இதுதான்! விவரம் உள்ளே
சினிமா

மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் தளபதி விஜய் திடீர் சந்திப்பு... காரணம் இதுதான்! விவரம் உள்ளே

சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வைப்பர் கண்ணாடியின் ரகசியத்தை உடைத்த தோட்டா தரணி! ட்ரெண்டிங் வீடியோ இதோ
சினிமா

சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வைப்பர் கண்ணாடியின் ரகசியத்தை உடைத்த தோட்டா தரணி! ட்ரெண்டிங் வீடியோ இதோ

பொன்னியின் செல்வன் 2 பட அமர்க்களமான ஆரம்பம்... லைகா ப்ரொடக்ஷன்ஸ் அதிரடியாக வெளியிட்ட அதிகாரப்பூர்வ வசூல் நிலவரம் இதோ!
சினிமா

பொன்னியின் செல்வன் 2 பட அமர்க்களமான ஆரம்பம்... லைகா ப்ரொடக்ஷன்ஸ் அதிரடியாக வெளியிட்ட அதிகாரப்பூர்வ வசூல் நிலவரம் இதோ!