பிக்பாஸ் பிரபலம் நடிகை ரைசா பதிவினால் ரசிகர்கள் அதிர்ச்சி.. வைரலாகும் பதிவு உள்ளே..

தெரு பூனையுடன் கடி வாங்கிய நடிகை ரைசா வைரலாகும் பதிவு உள்ளே.. - Bigg boss Fame actress Raiza Wilson gets bitten by a street cat | Galatta

தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் தொலைக்காட்சி நிகழ்சிகளில் ஒன்றாக இருந்து வருவது விஜய் தொலைகாட்சியில் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி. ஆறு சீசன்களை வெற்றிகரமாக் ஒளிப்பரப்பி மக்களின் பேராதரவுடன் இந்த ஆண்டு ஏழாம் சீசன் துவங்கவுள்ளது. எத்தனை சீசன் வந்தாலும் ரசிகர்கள் மத்தியிலும் தொலைகாட்சி டிஆர்பியும் கவனத்தை ஈர்த்த சீசன் என்றால் அது முதல் சீசன் தான். ரசிகர்களின் மிகுந்த ஆர்வத்தை தூண்டி மிகப்பெரிய ஹிட் அடித்த சீசனாக முதல் சீசன் இருந்து வருகிறது. இந்த முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட பலர் மக்களின் பெரும் ஆதரவை பெற்று தங்களுக்கென்ற தனி பயணத்தை தற்போது வெற்றிகரமாக தொடங்கி பயணித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஓவியா, நடிகர் ஹரிஷ் கல்யான், ஆரவ், பாடலாசிரியர் சினேகன்.. இந்த வரிசையில் சிறப்பாக விளையாடி ரசிகர்களின் வரவேற்பை பெற்று திரையுலகில் கதாநாயாகியாகவும் அறிமுகாமகி ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகையாக வளர்ந்துள்ளார் பிக் பாஸ் புகழ் ரைசா வில்சன்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சக போட்டியாளரும் நடிகருமான ஹரிஷ் கல்யான் உடன் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து இசையமைத்த இப்படம் தமிழ் சினிமாவில் வெற்றி படமாக அமைந்து ரைசா விற்கு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தந்தது. இப்படத்திற்கு பின் நடிகை ரைசா தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதன்படி நடிகை ரைசா வர்மா, FIR,  பொய்க்கால் குதிரை, காபி வித் காதல், கருங்காப்பியம்  ஆகிய படங்களில் நடித்தார்.

thalapathy vijay friends and kaavalan movie director siddique ismail passed away

தற்போது நடிகை ரைசா, லவ், தி சேஸ், ஆலிஸ், காதலிக்க யாருமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தற்போது பிஸியாக பல படங்களில் நடிகை ரைசா நடித்து வருகிறார்.

இந்நிலையில் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை  ரைசா தற்போது பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் கையில் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது போன்று உள்ளது. அந்த புகைப்படத்துடன், “தெரு பூனை விளையாடும் போது கடிப்பது வீட்டு பூனை போன்று இருக்காது” என்று பதிவிட்டுள்ளார். தெரு பூனையுடன் விளையாடி கடி வாங்கிய புகைப்படம் தற்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது.  மேலும் ரசிகர்கள் இதிலிருந்து குணமடைய ரைசாவிற்கு ஆறுதலான வார்த்தைகளை தெரிவித்து வருகின்றனர்.