“கடவுள் தாமதிக்கலாம், ஆனால் மறுக்க மாட்டார்..” சமந்தாவின் உருக்கமான பதிவு – ஆறுதல் தெரிவிக்கும் பிரபலங்கள்.. – விவரம் இதோ..

சமந்தாவின் உருக்கமான பதிவு ஆறுதல் தெரிவிக்கும் பிரபலங்கள் விவரம் உள்ளே Samantha emotional note about myositis | Galatta

தென்னிந்தியாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சமந்தா. தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் சமந்தா தற்போது தென்னிந்திய மொழி படங்களுடன் சேர்த்து பாலிவுட்டிலும் ஒரு ரவுண்டு அடித்து வருகிறார். முன்னதாக இந்தியில் ‘பேமிலி மேன்’ இணைய தொடரின் இரண்டாவது சீசனில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருந்தார் இந்த தொடரின் மூலம் சமந்தா இந்தியா முழுவதும் பிரபலமானார். கடந்த ஆண்டு சமந்தா நடிப்பில் தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படமும் தெலுங்கில் யசோதா திரைப்படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது. அதை தொடர்ந்து இந்த ஆண்டு சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இதிகாச திரைப்படமாக பான் இந்திய அளவு வெளியான திரைப்படம் ‘சாகுந்தலம்’ இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வி படமாக அமைந்தது. தற்போது சமந்தா இந்தியில் உலகளவில் பிரபலமான ஆங்கில தொடரான ‘சிட்டாடல்’ என்ற தொடரின் இந்திய வடிவத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘குஷி’ படத்திலும் நடித்து வருகிறார் சமந்தா.

வெற்றிகளை பெற்று நாடு முழுவதும் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா சில நாட்களுக்கு முன் மயோசிடிஸ் என்ற அறிய வகை தசை நோயால் பாதிகப்பட்டுள்ளார். குணபடுத்த முடியாத இந்த நோயில் பாதிக்கபட்ட சமந்தாவிற்கு ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் தங்கள் ஆறுதலை தெரிவித்தனர்  

தொடர் சிகிச்சையின் மூலம் மெல்ல மெல்ல உடல் தேறி வரும் சமந்தா சினிமாவில் பழையபடி படங்களில் நடிக்க தொடங்கினார். இடையே மயோடிசிடிஸ் நோய்க்கான சிகிச்சையையும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் செர்பியாவில் படப்பிடிப்பிற்கு சென்றுள்ள சமந்தா அப்பகுதியில் இருந்த தேவலாயதிற்கு சென்று வழிபாடு செய்துள்ளார். இந்த நிகழ்வை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அதனுடன் உருக்கமாக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில். “இந்த நோய் கண்டறியப்பட்டு ஒரு ஆண்டு ஆகிறது. இந்த ஒரு வருடம் எனது உடலுடன் பல போராட்டங்கள், நிர்பந்தமான நிறுத்தம், மீண்டும் தொடங்குதல், சுய பரிசோதனை, வாழ்வின் அர்த்தம், அதன் பிரதிபலிப்பு, எனது சினிமா வாழ்வில் தோல்விகளும்..

இந்த ஒரு வருடத்தில் பல பிராத்தனைகள், அவை ஆதிர்வாததிற்காகவும் பரிசுகளுக்காகவும் அல்ல. நான் வலிமை பெறவும் அமைதியடையவும் இந்த பிராத்தனைகளை செய்கிறேன்.. எல்லா நேரத்திலும் நாம் நினைப்பது நடக்காது என்று கற்றுக் கொடுத்த ஆண்டு.  நான் கட்டுப்படுத்த வேண்டியவற்றை கட்டுபடுத்த வேண்டும், மீதமுள்ளவற்றை விட்டுவிட வேண்டும். எப்போது ஒரு படி முன்னேறி கொண்டே இருக்க வேண்டும் வாழ்க்கையில் முன்னேறி செல்வதே ஒரு வெற்றி தான். எல்லா விஷயங்களும் சரியாக இருக்க வேண்டும் என்று காத்திருக்க கூடாது. அல்லது கடந்த காலத்திலே மூழ்கி இருந்து விட கூடாது.  நான் நேசிப்பவர்களிடமும் என்னை நேசிப்பவர்களிடமும் தொடர வேண்டும்.

உங்களில் பலர் கடினமான பல போர்களை சந்தித்து வருகிறீர்கள். உங்களுக்காகவும் நான் பிராத்தனை செய்கிறேன். அமைதி, அன்பு, மகிழ்ச்சி மற்றும் வலிமையைத் தேடுபவர்களுக்கு கடவுள்கள் தாமதிக்கலாம், ஆனால் ஒரு போதும் மறுக்கமாட்டார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ராஷி கண்ணா, டிடி , சுஜா வருணி, தர்ஷா குப்தா உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் ஆறுதலை கமெண்டில் தெரிவிதுள்ளனர். சமந்தாவின் உருக்கமான பதிவு இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியாகியிருக்கும் பொம்மை படத்தை பார்பதற்கான 5 முக்கிய காரணங்கள் - விவரம் உள்ளே.
சினிமா ஸ்பெஷல்ஸ்

எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியாகியிருக்கும் பொம்மை படத்தை பார்பதற்கான 5 முக்கிய காரணங்கள் - விவரம் உள்ளே.

பேஸ்புக் லைவில் விஷம் குடித்த பிரபல நடிகர்.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் – விவரம் உள்ளே..
சினிமா

பேஸ்புக் லைவில் விஷம் குடித்த பிரபல நடிகர்.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் – விவரம் உள்ளே..

‘இறவாக்காலம்’ ரிலீஸ் தேதி எப்போது? முதல் முறையாக எஸ் ஜே சூர்யா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – Exclusive interview உள்ளே..
சினிமா

‘இறவாக்காலம்’ ரிலீஸ் தேதி எப்போது? முதல் முறையாக எஸ் ஜே சூர்யா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – Exclusive interview உள்ளே..