கதைதேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சுல்தான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இதனை தொடர்ந்து கார்த்தி மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன்,முத்தையா இயக்கத்தில் விருமன்,பி எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் உள்ளிட்ட படங்களில் அடுத்து நடித்து வருகிறார்.

இதில் பொன்னியின் செல்வன் மற்றும் விருமன் படங்களின் ஷூட்டிங்கை நிறைவு செய்துள்ளார் கார்த்தி.அடுத்ததாக சர்தார் படத்தின் முதல்கட்ட ஷூட்டிங்கை நிறைவு செய்திருந்த கார்த்தி விரைவில் அடுத்தகட்ட ஷூட்டிங்கில் இணையவுள்ளார்.

சுல்தான் படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.கீதா கோவிந்தம்,டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா இந்த படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தனர்.

இந்த படம் ஏப்ரல் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் பாடல்கள் பெரிய ஹிட் அடித்திருந்தன.இந்த படத்தின் சூப்பர்ஹிட் ஓப்பனிங் பாடலான ஜெய் சுல்தான் பாடல் வீடியோ தற்போது 75 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அசத்தல் சாதனையை நிகழ்த்தியுள்ளது