மின்னல் தாக்கி தீப்பொறிகள் பறந்து பார்ப்பவர்களுக்கு திகிலை கொடுத்த நேரத்திலும் 35 வயது தக்க நபர் ஒருவர் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தூரத்திலிருந்து இடி முழக்கத்தை கேட்டாலே சிலருக்கு உடல் நடுங்கும். இடி மின்னலின் போது அதிக வெளியில் செல்வது எப்போதுமே பாதுகாப்பு இல்லை என பெரியவர்கள் எச்சரிப்பதை பார்த்திருக்கிறோம். அதற்கேற்ப மின்னல் விழுந்து பனை மரம் தீப்பிடித்து முற்றிலுமாக கருகியது என்ற செய்தியை நாம் அடிக்கடி பார்த்து இருப்போம். 

இப்படி மரமே முழுமையாக சாம்பலாகும் நிலையில், மின்னல் தாக்கி ஊழியர் ஒருவர் உயிர் பிழைத்தது ஒரு அதிசயமாகவே பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த வாரம் நடந்தாலும், ஊழியர் மீது மின்னல் தாக்கும் வீடியோ தற்போது ஊடகங்களில் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்துகிறது.

Man struck by lightning in Jakartaஇந்த வீடியோவை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இந்த மனிதர் எப்படி உயிர் பிழைத்தார்? என்ற கேள்வி கண்டிப்பாக மனதில் வந்து போகும். நிறுவனத்தின் உள்ளே அந்த ஊழியர் குடை பிடித்தபடி நடந்து செல்லும்போது, மின்னல் தாக்குவதையும், அப்போது கடும் தீப்பொறிகள் பறப்பது போலவும் வீடியோ காட்சியில் பதிவாகி உள்ளது.

இந்தோனேசியா நாட்டின் ஜகார்த்தா நகரின் வடகிழக்கு பகுதியில் நடந்துள்ளது. அங்கு கனரக இயந்திரங்களை தயாரிக்கும் உற்பத்தி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கனரக இயந்திரங்களை தயாரிக்கும்  இந்த உற்பத்தி நிறுவனத்தில் 35 வயது நபர் ஒருவர் செக்யூரிட்டி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். 

இந்நிலையில் இந்த நிறுவனத்தில் கடந்த வாரம் விறுவிறுப்பாக பணிகள் நடந்து கொண்டிருக்க இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை கொட்டியது.   அப்போது ஷிப்டில் வேலை செய்து கொண்டிருந்தநிலையில் குடையுடன் நடந்து சென்றபோது,  அந்த ஊழியர் மீது திடீரென படு பயங்கரமாக மின்னல் தாக்கியது. இதனால் அவர் தரையில் விழுந்ததும் சக ஊழியர்கள் உடனடியாக விரைந்து சென்றனர்.

பயங்கர மின்னல் தாக்கிய போதிலும் அந்த ஊழியர் உடலில் உயிர் இருப்பதை கண்டு மற்ற ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். உடலில் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் கிடந்த ஊழியரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்ற அந்த ஊழியர் தற்போது வீட்டில் முழுமையாக குணமடைந்து வருகிறார்.

Man struck by lightning in Jakartaஒரு மனிதனுக்கு இறப்பு என்பது எந்த நேரத்திலும் நிகழலாம். இறப்பை தீர்மானிக்கும் சக்தி மனிதனுக்கு கிடையாது. ஆனாலும் விதியையே சாகடித்து கடைசி நேரத்தில் இறப்பை வெற்றி கொண்டு வாழும் அதிர்ஷ்டம் ஒரு சிலருக்குதான் வாய்க்கும்.

அந்த வகையில் உலகமே அதியசத்தக்க வகையில் உயிர்பிழைத்த அந்த நபரை பற்றிதான் இங்கு நாம் பார்த்துள்ளோம். ஊழியர் கையில் வைத்திருந்த வாக்கி-டாக்கி மின்னலை ஈர்த்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ஊழியர் மின்னல் நேரத்தில் குடையை எடுத்துச் சென்றதும் மின்னல் தாக்கும் வாய்ப்புகளை அதிகரித்திருக்கலாம் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Security officer in Jakarta was struck by lightning while on duty, avoid using radio and cellular telephones when it is raining, the condition of the victim survived after 4 days of treatment. not everyone has the same chance to live. 当選確率 #Bitcoin #NFTs $BTC $ETH #ALERT pic.twitter.com/4XhW6Oh3U9

— Lexus RZ (@Heritzal) December 26, 2021