தமிழ் சீரியல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு சீரியல் ஜீ தமிழின் செம்பருத்தி.இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு நல்ல TRP-யையும் அள்ளி குவித்தது.ஜீ தமிழை பட்டிதொட்டி எங்கும் கொண்டுசேர்த்ததில் இந்த தொடருக்கு முக்கிய பங்கு உண்டு.

ப்ரியா ராமன்,ஷபானா,கார்த்திக் ராஜ் மூவரும் இந்த தொடரின் முன்னணி நட்சத்திரங்களான அகிலாண்டேஸ்வரி,பார்வதி,ஆதி கேரக்டர்களில் நடித்து வந்தனர்.கொரோனா பாதிப்பை அடுத்தும் இந்த தொடர் விறுவிறுப்பாக சென்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.கடந்த சில வாரங்களாக செம்பருத்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்திகள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றன.

இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரமாக கருதப்படும் ஆதி என்ற கேரக்டரில் நடித்து வரும் கார்த்திக்குக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.இவர் இந்த தொடரில் இருந்து விலகுகிறார் என்ற அதிர்ச்சி தரும் தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.இவருக்கு பதிலாக குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்ற தகவலும் பரவி வருகிறது.

ஜீ தமிழ் தரப்பில் இதுகுறித்து எந்த அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.ரசிகர்கள் பலரும் கார்த்திக் தான் ஆதியாக நடிக்கவேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.அவரை தொடரில் இருந்து நீக்கினால் தொடரை புறக்கணிக்கப்போவதாகவும் தெரிவித்து வருகின்றனர்.இன்னும் அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் , இந்த தகவல் உணமையானதா,உண்மையிலேயே கார்த்திக் விலகினாரா,அஸ்வின் புதிய ஹீரோவாகிறாரா உள்ளிட்ட கேள்விகளுக்கான பதிலை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ஊருக்கு கிளம்புவது போல காட்சி வர,அவர் விலகுவது உறுதியாகிவிட்டதாக ரசிகர்கள் முடிவெடுத்து நேற்றைய எபிசோடின் புகைப்படம் ஒன்றையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.இந்த சீரியலில் கார்த்திக் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து ஜீ தமிழ் விரைவில் விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

A post shared by Tamil Tellywood (@tamiltellywood)