வித்தியாசம் என்ற பெயருக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்துவரும் இயக்குனர்களில் ஒருவர் பார்த்திபன்.இவரது படங்கள் எப்போதும் ஒரு வித்தியாசமான கண்ணோட்டம்,மேக்கிங் என்று ஏதேனும் ஒன்றை பெற்றிருக்கும்.இவர் நடித்து இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்று பல விருதுகளை தட்டி சென்றது.

இந்த படத்தின் பாலிவுட் ரீமேக் விரைவில் வெளியாகவுள்ளது இதனையும் பார்த்திபன் இயக்கியுள்ளார்.இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் துருவ நட்சத்திரம்,பொன்னியின் செல்வன் என மெகா பட்ஜெட் படங்களில் நடித்துள்ளார்.இந்த படங்கள் வெகு விரைவில் வெளியாகவுள்ளன.

ஒத்த செருப்பு படத்தினை தொடர்ந்து மீண்டும் வித்தியாச முயற்சியாக சிங்கிள் ஷாட்டில் ஒரு படத்தினை எடுத்துள்ளார் பார்த்திபன்.இரவின் நிழல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.வரலக்ஷ்மி சரத்குமார்,பிரிகிடா சகா,ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் ஜூலை 15ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் ரொமான்டிக் முத்த காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த காட்சி சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது.இந்த காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்