தமிழ் சினிமாவில் தனது விடாமுயற்சியால் தடம் பதித்தவர் அருண் விஜய்.இவர் ஹீரோவாக நடித்த யானை படம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து அருண்விஜய் சினம்,பாக்ஸர்,அக்னி சிறகுகள்,பார்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

யானை படத்தினை ஹரி இயக்கியுள்ளார்.Drumsticks Productions இந்த படத்தை தயாரித்துள்ளனர்.அருண் விஜய் படங்களில் அதிக பட்ஜெட் கொண்டஇந்த படம் உருவாகியுள்ளது.இந்த படத்தின் ஹீரோயினாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார்.

யோகி பாபு,குக் வித் கோமாளி புகழ்,அம்மு அபிராமி,சமுத்திரக்கனி,கே ஜி எப் புகழ் கருடா ராம்,ராதிகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்த படம் ஜூலை 1ஆம் தேதி இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான சண்டாளியே பாடல் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த பாடல் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்