தமிழ் சினிமா ரசிகர்களை தனது நடிப்பால் கவர்ந்து இழுத்து முன்னணி நடிகராக வளர்ந்து நிற்பவர் சீயான் விக்ரம்.இவர் நடித்துள்ள கோப்ரா,பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.இவர் அடுத்து நடிக்கும் சீயான் 61 படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.தமிழ் சினிமாவின் ஹிட் இயக்குனர்களில் ஒருவரான பா ரஞ்சித் இயக்குகிறார்.ஜீ வி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் பூஜையின் போது பத்திரிகையாளர்களை சந்தித்த பா ரஞ்சித் , பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.விக்ரமுடன் இணைந்து முதல் முறையாக பணியாற்றுவது மகிழ்ச்சி,ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துடன் பல வருடங்களாக பயணித்து வருகிறேன் மீண்டும் ஒரு பெரிய படத்தில் அவருடன் இணைவது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

இந்த படம் பிரிட்டிஷ் காலத்தில் நடக்கும் கே ஜி எப்பில் இருக்கும் மக்களை பற்றிய ஒரு படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.படத்தின் ஷூட்டிங் மிகப்பெரிய சவாலாக இருக்கும் அதனை வெற்றிகரமாக முடித்து மக்களிடம் கொண்டு சேர்க்க ஆர்வத்துடன் காத்திருக்கேன் என்று தெரிவித்துள்ளார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்