இசையமைப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக மாறியிருப்பவர் ஹிப்ஹாப் தமிழா.கனவுகளோடு இருந்த ஒரு மிடில் கிளாஸ் மனிதன் இன்று பல லட்சம் ரசிகர்களால் கொண்டாடப்படும் இசை நாயகனானாக மாறியுள்ளார்.ஆல்பம் பாடல்களில் ஆரம்பித்த இவர் விஷாலின் ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக மாறினார்.

இதனை தொடர்ந்து இவர் இசையமைத்த பல படங்கள் சூப்பர்ஹிட் அடித்தன.அடுத்ததாக தனது வாழ்க்கையையே மையமாக வைத்து இவர் எடுத்த படம் மீசைய முறுக்கு.இந்த படத்தின் மூலம் நடிகராகவும்,இயக்குனராகவும் களமிறங்கினார் ஆதி.இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.இதனை தொடர்ந்து இவர் நட்பே துணை,நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக உருவெடுத்தார்.

ஹீரோவானாலும் தொடர்ந்து வேறு படங்களுக்கு இசையமைப்பதையும் தொடர்ந்து வந்தார்.இவர் நடித்து இயக்கிய சிவகுமாரின் சபதம் படம் சமீபத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து இவர் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஷ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் அன்பறிவு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

தற்போது இவர் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.மரகத நாணயம் பட இயக்குனர் ARK சரவண் இயக்கும் அடுத்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஹீரோவாக நடிக்கிறார்,சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.இந்த படம் 2022-ல் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.