17 வயது இளம் பெண்ணை 2 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அந்த பெண்ணுக்கு விஷம் கொடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், 
பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவில் தான் பாலியல் கொடூரத்தின் உச்சக்கட்ட கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

நொய்டாவில் இருக்கும் கிரேட்டர் நொய்டாவில் 17 வயதான தலித் இளம் பெண் ஒருவர், தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார். 

இந்த பெண், மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், குடும்ப வறுமை காரணமாக, படிப்பைத் தொடர முடியாமல் வேலைக்குச் செல்ல முடிவு செய்து, அது விசயமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியாக வெளியே போய் விட்டு வந்தார்.

அப்போது, அந்த இளம் பெண்ணை பின் தொடர்ந்த அதே பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள், அந்த பெண் செல்லும் இடமெல்லாம் சென்று இருக்கிறார்கள்.

ஆனால், இது எதையும் சரியாக கவனிக்காத அந்த இளம் பெண், தனது வீட்டிற்கு வருவதற்காக, அங்குள்ள ஒரு சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தார்.

அப்போது, ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு வந்ததும், அங்கு ஆட்கள் நடமாட்டம் எதுவும் இல்லாத சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அந்த 2 இளைஞர்களும், அந்த பெண்ணை அங்கிருந்து தூக்கிச் சென்று, மறைவான ஒரு இடத்தில் வைத்து, பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

அந்த இளம் பெண்ணை பலாத்காரம் செய்யும் போது, அதில் ஒருவர், “இதனை நீ வீடியோ எடுடா, அதே போல், உன்னை நான் வீடியோ எடுக்கிறேன்” என்று, இருவரும் டீல் பேசி, அதன் படியே, அந்த இளம் பெண்ணை பலாத்காரம் செய்வதை இருவரும் மாறி மாறி வீடியோ எடுத்துக்கொண்டனர்.

இருவரின் பாலியல் இச்சைகள் எல்லாம் தீர்ந்த பிறகு, அவர்கள் இருவரும் நேர்ந்த அந்த பெண்ணுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்று உள்ளனர். ஆனால், எப்படியோ அந்த இளம் பெண் உயிர் பிழைத்து விட்டார். 

இதனையடுத்து, அந்த இரு இளைஞர்களும் அந்த பெண்ணிடம் அந்த பாலியல் பலாத்கார வீடியோவை காட்டி, “இந்த விஷயத்தை நீ வெளியே சொன்னால் உன்னுடைய இந்த ஆபாச வீடியோவை நாங்கள் இணையத்தில் பதிவிட்டு விடுவோம்” என்று, மிக கடுமையாக மிரட்டி, அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டலும்
விடுத்திருக்கிறார்கள். 

இதனால், இன்னும் பயந்து போன அந்த இளம் பெண் இது குறித்து கடந்த சில மாதங்களாகவே யாரிடமும் எதுவும் சொல்லாமல் இருந்தார்.

இந்த நிலையில் தான், இந்த பாலியல் பலாத்கார சம்பவத்தால், அந்த இளம் பெண் கர்ப்பம் தரித்து உள்ளார். இதன் காரணமாக, அந்த இளம் பெண்ணின் பெற்றோருக்கு இந்த விசயம் தெரிய வந்த நிலையில், மகளிடம் விசாரித்து உள்ளனர். அப்போது, தனக்கு சேர்ந்த பாலியல் கொடுமைகளைக் கூறி அழுதுள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண்ணின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் இருவரையும் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பீதியும், பரபரப்பும் ஏற்பட்டது.