அசோக் செல்வன் - சரத்குமாரின் செம்ம த்ரில்லர் போர் தொழில் உருவான விதம்... ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் அட்டகாசமான வீடியோ இதோ!

அசோக்செல்வன் சரத்குமாரின் போர் தொழில் பட MAKING வீடியோ வெளியீடு,ashok selvan sarathkumar in por thozhil making video out now | Galatta

நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் இருவரும் இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து வெளிவந்து பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ள போர் தொழில் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது. தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் வரிசையாக சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் என என ஐந்து திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்தன. தொடர்ந்து இந்த 2023 ஆம் ஆண்டிலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்த மாடர்ன் லவ் சென்னை எனும் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் ஆந்தாலஜி வெப் சீரிஸில் நடித்துள்ள அசோக் செல்வன் தற்சமயம் அறிமுக இயக்குனர் CS.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகும் சபா நாயகன் படத்தில் நடித்து வருகிறார்.

அதேபோல் தென்னிந்திய சினிமாவில் இன்றைய அமையாத நடிகர்களில் ஒருவராக ஹீரோ - வில்லன் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த கதாப்பாத்திரமாக கணக்கச்சிதமாக நடிக்கும் நடிகர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் இந்த 2023 ஆம் ஆண்டில் தொடக்கத்தில் தளபதி விஜயுடன் இணைந்து வாரிசு, ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து ருத்ரன், இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படைப்பாக சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த கஸ்டடி ஆகிய திரைப்படங்களிலும் முன்னணி கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருந்தார். தொடர்ந்து கிரிமினல், தி ஸ்மைல் மேன், பரம்பொருள், நிறங்கள் மூன்று ஆகிய திரைப்படங்கள் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்களின் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் அசோக் செல்வன் - சரத்குமார் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் போர் தொழில். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் போர்த் தொழில் திரைப்படத்தில் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் ஆகியோரோடு இணைந்து நடிகை நிக்கிலா விமல் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் இ4 எக்ஸ்பிரிமெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள போர் தொழில் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசான போர் தொழில் திரைப்படம் ரசிகர்களுடைய ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டின் மிகச்சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் கட்டாயமாக போர்க்களத்தில் திரைப்படமும் இடம் பிடிக்கும் என சொல்லும் அளவிற்கு அனைவரின் கவனத்தையும் போர்த் தொழில் ஈர்த்துள்ளது. பக்கா த்ரில்லர் திரைப்படமாக முன்பு விஷ்ணு விஷால் நடிப்பில் வந்த ராட்சசன் திரைப்படத்தோடு ஒப்பிட்டு மிக சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் தங்களது மேலான விமர்சனங்களை கொடுத்து வருவதால் படத்தின் மீது இன்னும் ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் போர் தொழில் திரைப்படத்தின் புதிய மேக்கிங் வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த மேக்கிங் வீடியோ இதோ…
 

சிவகார்த்திகேயனின் மாவீரன் பட செம்ம சர்ப்ரைஸ்... சோசியல் மீடியாவை அதிரவிடும் அட்டகாசமான GLIMPSE இதோ!
சினிமா

சிவகார்த்திகேயனின் மாவீரன் பட செம்ம சர்ப்ரைஸ்... சோசியல் மீடியாவை அதிரவிடும் அட்டகாசமான GLIMPSE இதோ!

ஹரிஷ் கல்யாண் - 'லவ் டுடே' இவானாவின் LGM பட ரொமான்டிக் ட்ரீட்... MSதோனி தயாரிப்பில் முதல் படைப்பின் முதல் பாடல் இதோ!
சினிமா

ஹரிஷ் கல்யாண் - 'லவ் டுடே' இவானாவின் LGM பட ரொமான்டிக் ட்ரீட்... MSதோனி தயாரிப்பில் முதல் படைப்பின் முதல் பாடல் இதோ!

சினிமா

"கலைத்துவமான சூதாட்டம்"- பொம்மை படத்தை தயாரித்து நடித்துள்ள SJசூர்யா படங்களை தயாரிப்பது பற்றி கருத்து! வீடியோ இதோ